For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தலைமுடிக்கு எப்போது எண்ணெய் வைப்பது நல்லது..? அதுவும் இந்த சமயத்தில் வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும்..!!

Know when to oil your hair.
01:34 PM Jul 29, 2024 IST | Chella
தலைமுடிக்கு எப்போது எண்ணெய் வைப்பது நல்லது    அதுவும் இந்த சமயத்தில் வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும்
Advertisement

தலை முடிக்கு சரிவர எண்ணெய் வைக்கவில்லை என்றால் முடியை வலுவிழக்க செய்து உயிரற்றதாக மாற்றிவிடும். முடிக்கு எண்ணெய் தடவுவது மிக முக்கியம். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்ற எண்ணெய் மிகவும் அவசியம். எண்ணெய் வைப்பதன் மூலம் தலை வறண்டு போகாமல் இருக்கும். சிலர் காலையில் குளித்த பிறகு தலைக்கு எண்ணெய் வைக்கின்றனர். ஒருசிலர் இரவில் தூங்கும் முன்பு எண்ணெய் வைக்கின்றனர். மேலும் சிலர், ஷாம்பு போடுவதற்கு முன்பு எண்ணெய் வைக்கின்றனர். சிலர் குளிப்பதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் வைக்கின்றனர். இந்நிலையில், முடிக்கு எப்போது எண்ணெய் வைப்பது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

முடிக்கு எப்போது எண்ணெய் தடவ வேண்டும்..?

முடிக்கு எண்ணெய் வைப்பது நமது உடல் சூட்டையும் குறைக்க உதவுகிறது. அதே சமயம் முடிக்கு ஏற்ற எண்ணையை பயன்படுத்துவதும் முக்கியம். குளிப்பதற்கு முன்பு முடிக்கு எண்ணெய் வைப்பது நல்லது. குறைந்தபட்சம் 1 மணி நேரத்திற்கு முன்பே எண்ணெய் தடவ வேண்டும். பிறகு ஷாம்பு கொண்டு முடியை கழுவினால், முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகள் சரியாகி நன்மைகள் கிடைக்கும். பொதுவாக முடி ஆரோக்கியமாக இருக்க புரதச்சத்து அவசியம்.

முடிக்கு மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை தருகிறது. புரதச் சத்து குறைபாட்டை சரி செய்கிறது. முடியில் புரதம் இல்லாததால், பலவீனமடைய தொடங்குகிறது. முடிக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தலைக்கு எண்ணெய் வைப்பது, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. தினசரி முடிக்கு எண்ணெய் வைக்கும் போது, இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இவை முடி வேர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்த விநியோகம் போன்றவற்றை மேம்படுத்தப்படுகிறது. இவை முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதோடு, முடி உதிர்தலையும் குறைக்கிறது.

குளிர்காலத்தில் எண்ணெய் வைக்கலாமா..?

ஈரப்பதமான வானிலை தலைமுடியை உயிரற்றதாக மாற்றுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். முடி காற்றில் இருந்து அதிக ஈரப்பதத்தை உறிஞ்சி முடியின் தண்டு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், முடி அதிகம் உடையக்கூடியதாக மாறும். மேலும், வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக உச்சந்தலையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது பொடுகு மற்றும் உச்சந்தலையில் பாதிப்படைய செய்து முடி வேர்களை வலுவிழக்கச் செய்கின்றன. எனவே, இந்த சமயத்தில் முடிக்கு எண்ணெய் வைப்பது கூடுதல் பாதுகாப்பை தருகிறது.

Read More : மகனின் உடல்நிலை..!! திருநெல்வேலி பெண்ணை தேர்ந்தெடுத்தது ஏன்..? மனம் திறந்த நெப்போலியன்..!!

Tags :
Advertisement