முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் கோவிலுக்குள் ஸ்ரீராமர் வருவார்.! மந்திரியின் கருத்தால் புதிய சர்ச்சை.!

01:33 PM Jan 04, 2024 IST | 1newsnationuser7
Advertisement

உத்திரபிரதேசம் மாநிலத்தின் புனித தலங்களில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக பேசியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறும் தினத்தில் அனைத்து பக்தர்களும் ராம தீபத்தை ஏற்றி தீபாவளி போல வழிபட வேண்டும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பீகார் மாநில அமைச்சர் கூறியிருக்கும் கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

பீகார் மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் தேஜ் பிரதாப் யாதவ். இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் ராமர் கோவில் கொண்டாட்டங்கள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய தேஜ் பிரதாப் யாதவ்" இந்தியக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால்தான் ஸ்ரீராமர் தனக்காக கட்டப்பட்டிருக்கும் கோவிலுக்கு வருவார்" என தெரிவித்திருக்கிறார் இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பு பாரத பிரதமர் மோடி பிரதான பக்தி நகரமான அயோத்தியை பல்வேறு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்குவது தனது வாக்குறுதி என தெரிவித்திருந்தார். மேலும் பக்தர்கள் அனைவரும் ராமர் கோவில் திறப்பு விழா அன்று அயோத்திக்கு வருகை புரிந்து நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் அவர்களுக்கு எதிரான இந்தியா கூட்டணியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது .

Tags :
BJPINDIA AlliesPoliticssram templeTEJ PRATHAP YADAV
Advertisement
Next Article