வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இனி இன்ஸ்டாவிலும்!… வரப்போகும் புதிய அப்டேட்!… தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கலாம்!
தனது பயனர்களை எல்லா தளங்களிலும் இணைக்கும் விதமாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யும் அம்சத்தை மெட்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை எளிதாக பேஸ்புக்கில் ஷேர் செய்ய முடியும். ஒருமுறை உங்களுடைய பேஸ்புக் கணக்கை வாட்ஸ் அப் உடன் இணைத்துவிட்டால் நீங்கள் ஒவ்வொருமுறை ஸ்டேட்டஸ் போடும்போதும் அது தானாகவே பேஸ்புக்கில் ஷேர் ஆகிவிடும்.
இதை அப்படியே தற்போது இன்ஸ்டாகிராமுக்கும் கொண்டு வந்துள்ளனர். இதனால் இனி நீங்கள் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டால் அது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் காட்டப்படும். இந்த புதிய அம்சத்தை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்காக புதிய பீட்டா வாட்ஸ் அப் வெர்ஷனை பிளே ஸ்டோரில் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த புதிய வசதி இப்போது வாட்ஸ்அப் பீட்டாவில் செயல்பாட்டில் உள்ளது. இந்த வசதியை நம் தேவைக்கு ஏற்ப ஆன்/ஆஃப் செய்துகொள்ளலாம். இது எப்போது முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரும் எனக் கூற முடியாது.
எப்படி பயன்படுத்துவது? இதற்காக முதலில் உங்களுடைய வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து, அதில் அப்டேட்ஸ் டேபை கிளிக் செய்து, ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இந்த பக்கத்தில் மேலே காட்டப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால், ஸ்டேட்டஸ் பிரைவசி என்று காட்டும். அதை கிளிக் செய்து உள்ளே சென்றால் ‘ஷேர் மை ஸ்டேட்டஸ் அப்டேட்’ என்ற பகுதியில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளை இணைப்பதற்கான செட்டப் இருக்கும். அதன் உள்ளே சென்று உங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை இணைப்பது மூலமாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை எளிதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக நீங்கள் பகிர முடியும்.
இதன் பின்னர் நீங்கள் போடும் எல்லா வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களும் தானாகவே இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டோரிக்களாக காட்டப்படும். இந்த புதுமையான அம்சம், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ட்ரெயின் விடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இனி உங்களைப் பற்றிய விஷயங்களை வாட்ஸ் அப்பில் மட்டுமின்றி, நீங்கள் பயன்படுத்தும் எல்லா சமூக வலைதளங்களிலும் எளிதாக பிறருக்கு காட்டி மகிழலாம்.