ஐபோன் பயனர்களுக்கு பாஸ் கீ அம்சத்தை அறிமுகப்படுத்திய WhatsApp.!! இதை பயன்படுத்துவது எப்படி.?
WhatsApp: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களின் உரையாடல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் அவர்களது பிரைவசி பாதுகாக்கப்படுவதற்கும் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த சிறப்பும் சம் செயல்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
பாஸ் கீ வாட்ஸ்அப் செயலியில் உள் நுழையும் முறையை மேம்படுத்துவதோடு அதிக பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இதன் மூலம் ஒருவர் தனது வாட்ஸ்அப்(WhatsApp) செயலியை அணுகுவதற்கு ஒவ்வொரு முறையும் ஆறு இலக்க குறியீட்டை உள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாஸ் கீ என்றழைக்கப்படும் கடவுச் சாவியை உள்ளீடு செய்த பிறகு பயனர்கள் தங்களின் தற்போதைய அங்கீகார முறைகளான ஃபேஸ் ஐடி, டச் ஐடி அல்லது சாதன கடவுக்குறியீடு போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கணக்குகளில் உள்நுழைய முடியும் என மெட்டா நிறுவனம் தனது X சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
பாஸ்வேர்டுக்கு பதிலாக பாஸ் கீ பயன்படுத்துவது இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளை அணுகுவதற்கான புதிய, பாதுகாப்பான வழியாகும். பாஸ்வேர்டுகளைப் போலன்றி, இந்த பாஸ் கீ உங்கள் செல்போன் அல்லது கம்ப்யூட்டரில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும். ஹேக்கர்களால் திருட முடியாது. பயனர்கள் தங்கள் அடையாளத்தை அங்கீகரிக்க கைரேகை அல்லது முகத்தை ஸ்கேன் செய்தல் போன்ற தங்கள் கணினி அல்லது தொலைபேசியின் பாதுகாப்பு திறன்களை நம்பலாம். எஸ்எம்எஸ் ஓடிபி தொந்தரவை அவர்கள் சமாளிக்க வேண்டியதில்லை. உங்கள் செல்போனில் ஆதென்டிகேஷன் கீ இருப்பதால், நீங்கள் இன்டர்நெட் கனெக்சன் இணைக்கப்படாத போதும் கூட பாஸ்வேர்ட் மூலம் மீண்டும் உள்நுழையலாம்.
இந்த பாஸ் கீ ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் FIDO அலையன்ஸ் உருவாக்கிய பாதுகாப்பான புதிய தொழில்நுட்பமாகும். பாஸ்கீ ஆன்லைன் பாதுகாப்பில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ போனில் பாஸ் கீ எவ்வாறு அமைப்பது:
1 வாட்ஸ்அப் செயலியை ஓப்பன் செய்து கொள்ளவும்.
2 செட்டிங் மெனுவிற்கு சென்று அக்கவுண்ட்டை ஓபன் செய்யவும்.
3 பாஸ் கீ ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
4 பாஸ் கீ உருவாக்கு என்ற கட்டளை வரும். இப்போது தொடரவும் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும் .
5 தற்போது இருக்கும் ஸ்கிரீன் லாக்கை பயன்படுத்தலாமா.? என்று ஐபோன் கேட்கலாம்.
6 இப்போது வேறொரு சாதனத்தில் உங்கள் WhatsApp செயலியை நீங்கள் ஓபன் செய்தால் 6 இலக்க குறியீடு உள்ளீடு செய்யாமல் உங்கள் செல்போனின் ஸ்கிரீன் லாக் அல்லது கைரேகையை பயன்படுத்தி லாகின் செய்ய முடியும்.