Whatsapp Update| கூகுள் டிரைவ்-க்கு குட் பாய்!! இனி QR Code போதும்..!! வந்தது புது அப்டேட்!
சமூக வலைதள செயலிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான புது புது அப்டேட்களை, அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை வியக்க வைக்கும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்போது போன்களுக்கு இடையேயான சாட் டிரான்ஸ்பர் வசதியில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. WABetaInfo வழியாக கிடைத்த தகவலின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் 2.24.9.19 பீட்டா வெர்ஷன் வழியாக சாட் டிரான்ஸ்பருக்கான புதிய அம்சம் ஒன்றை சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் க்யூஆர் கோட்களை பயன்படுத்தி சாட் டேட்டாவை நேரடியாக ஒரு டிவைஸில் இருந்து மற்றொரு டிவைஸிற்கு மாற்ற உதவுகிறது.
அதாவது ஒரு பயனர் புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறும் போது, பழைய ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் வழியாக அணுக கிடைக்கும் க்யூஆர் கோட்-ஐ பயன்படுத்தி, அதில் உள்ள அனைத்து சாட் ஹிஸ்டரியையும், டேட்டாக்களையும் புதிய ஸ்மார்ட்போனுக்கு மிகவும் எளிதாக டிரான்ஸ்பர் செய்யலாம்.
இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் உள்ள சாட்களை டிரான்ஸ்பர் செய்வதற்காக கூகுள் டிரைவ்வை நம்பியிருக்கும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வேலையை எளிதாக்குகிறது. இது நீண்டகாலமாகவே ஆண்ட்ராய்டு பயனர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த புதிய அம்சம் டிவைஸ்களுக்கு இடையிலான சாட் ஹிஸ்டரியை மாற்றும் செயல்முறையை கணிசமாக எளிதாக்கும். கூடவே கூகுள் டிரைவ்வை பயன்படுத்த வேண்டிய தேவையையும் நீக்குகிறது. கூகுள் டிரைவ் வழியிலான அணுகுமுறையுடன் ஒப்பிடும்போது இந்த அம்சம் மிகவும் யூசர் பிரென்டலி ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Read more ; டி20 தொடரில் படுதோல்வி!! கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் வில்லியம்சன்!!