For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’ஜேஎன்.1 கொரோனா வைரஸின் பாதிப்புகள் எப்படி இருக்கும்’..? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

04:24 PM Dec 20, 2023 IST | 1newsnationuser6
’ஜேஎன் 1 கொரோனா வைரஸின் பாதிப்புகள் எப்படி இருக்கும்’    உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Advertisement

உலகளவில் பரவி வரும் ஜேஎன்.1 கொரோனா வைரஸால் பாதிப்புகள் அதிகமாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டது. ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கேரளாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸ் என்பது உருமாறிய பிரோலா (BA.2.86) வகையை சேர்ந்தது ஆகும். ஆனால், இந்த புதிய வகை கொரோனா தனித்துவமாகவும் வேறுபாட்டுடனும் செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வகை கொரோனா வைரஸ் மூலம் கூடுதல் ஆபத்துகள் ஏற்படாது என்றும், பனிக்காலம் என்பதால் சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பூசிகள் JN.1 வைரஸால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் அல்லது இறப்புகளை தடுக்க போதுமானதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும், கோவாவை சேர்ந்த 15 பேருக்கும் JN.1 வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement