அமெரிக்க அதிபர் தேர்தல் முதல் போர்கள் வரை!. 2024ல் சர்வதேச அரசியலை புரட்டி போட்ட சம்பவங்கள்!.
International politics: பல கொலை முயற்சி உள்ளிட்ட பதற்றங்களுக்கு இடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார், இது அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இந்த தேர்தலில் 312 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 வாக்குகளை வென்று தோல்வி அடைந்தார்.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த போராட்டம் கலவரம் உள்நாட்டு போர் போல மாறிய நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்தார். வங்கதேச பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்தனர். இதையடுத்து அங்கே ஆட்சி கவிழ்ந்தது. அதோடு ஷேக் ஹசீனா டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டார். இதையடுத்து வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகராக முகமது யூனுஸ் களமிறக்கப்பட்டார். இப்போது உள்ளே அங்கே மியான்மரின் அரக்கன் ஆர்மி உள்ளே நுழைந்து நாட்டை கைப்பற்றும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஏழு மாதங்களாக, இஸ்ரேல் - ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் ஆதரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மத்தியில், தனது பழைய பகையின் தொடர்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான். ஆனால், இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு சிஸ்டம் காரணமாக பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
இதனை தொடர்ந்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். கடந்த மே மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணம் அடைந்தார். இஸ்ரேல் போருக்கு இடையே ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.
ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரையும் விபத்தில் பலியாகி உள்ளனர். ஆனால் இது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
இந்தியாவில் 19 ஏப்ரல் முதல் ஜூன் 1, 2024 வரை ஏழு கட்டங்களாக மக்களவையின் அனைத்து 543 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4 அன்று 18வது மக்களவை அமைக்க முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக பெரும்பான்மையை இழந்தாலும் பாஜக கூட்டணியால் என்டிஏ ஆட்சியை பிடித்தது. 7 ஜூன் 2024 அன்று, பிரதமர் நரேந்திர மோடி என்டிஏவை சேர்ந்த 293 எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தார்.
சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு அவரது தந்தைக்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பஷார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் வசம் சிரியா சென்றுள்ளதால், நாட்டை விட்டு பஷார் அல் ஆசாத் தப்பி ஒடினார். சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிபர் அல் அசாத் நாட்டை விட்டு ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் - ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் அதிபா் அல்-அசாத் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளா்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன.
இதேபோல், அரசியல் நெருக்கடி காரணமாக பிரான்ஸ் அரசு கவிழ்ந்து உள்ளது. பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் மைக்கேல் பார்னியர் தோல்வி அடைந்ததை அடுத்து, பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. அவர் அதிபர் இம்மானுவேல் மக்ரோனால் நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து உள்ளது. 1962-க்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாட்டின் அரசாங்கம் கவிழ்வது இதுவே முதல் முறையாகும்.
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் தோன்றி தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் அறிவித்தார். ஜனநாயக நாடான தென்கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன்பின் அதை அவர் வாபஸ் வாங்கினார். அவரின் அவசர நிலை அறிவிப்பிற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாததால் அவசர நிலை திரும்ப பெறப்பட்டது. அங்கே ஆட்சி கவிழும் நிலை உள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது ICBM ஏவுகணைகளை ஏவி தாக்கி உள்ளது. இது அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இதனால் எங்கே ரஷ்யா அடுத்து அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக ரஷ்ய அதிபர் புடின்.. ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
ஈரானும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. ஏற்கனவே ரஷ்யா - சீனா டாலரை புறக்கணித்து கடந்த 10 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் தற்போது ஈரான் - ரஷ்யா இடையிலான வர்த்தகம் முழுமையாக டாலர் இல்லாத வர்த்தகமாக மாறி உள்ளது. ஏற்கனவே சீன - ரஷ்ய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் 90% க்கும் அதிகமானவை ரஷ்யாவின் ரூபிள் அல்லது சீனாவின் யுவானில் நடப்பதாக மிஷுஸ்டின் கூறி உள்ளார். பொருளாதார உறவுகளில் கிட்டத்தட்ட டாலர் இல்லாத பரிவர்தனைகளையே நாங்கள் மேற்கொள்கிறோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இலங்கையின் 16வது பாராளுமன்றம் 24 செப்டம்பர் 2024 அன்று கலைக்கப்பட்டது. இந்த தேர்தலில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரி தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு மகத்தான வெற்றியாக அமைந்தது. NPP 159 இடங்களை வென்றதுமட்டக்களப்பு தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனிக் கட்சியொன்று அதிகப் பெரும்பான்மையைப் பெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.
உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் இனிமேல் இடைத்தரராக செயல்படுவதை நிறுத்துவதாக கத்தார் அறிவித்து உள்ளது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அமைதி பேச்சுவார்த்தைகளை கத்தார் மேற்கொண்டு வந்தது. அதை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
இந்த வருடம் வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு சொந்தமான தீவில் திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா தாக்குதல் நடத்தி உள்ளது என்று சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இருப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தென்கொரியா கூறி உள்ளது. தென் கொரியாவிற்கு சொந்தமான Baengnyeong தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் Yeonpyeong தீவு ஆகிய இரண்டு தீவுகளில் இந்த தாக்குதல் வடகொரியா மூலம் நடத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் படையின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த ஹமாஸ் படை அங்கிருந்த 3 பேர் இஸ்ரேல் வீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் அங்கு டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் படையின் தலைவரான சின்வார் அங்குக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போஸ்டில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயம் எதையும் உருவாக்க கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது. அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
உட்கட்சி பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ட்ரூடோ ஏப்ரல் மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்ய 80% வாய்ப்பு உள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கனடிய தலைவர்கள் மற்றும் அவரது சொந்த கட்சியினரிடையே கருத்துக்கள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன. ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறாராம்.
சீனா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா நாட்டு படைவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.தைவானைச் சுற்றி சீனா பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில்தான்.. போர் நடத்த தயாராக இருங்கள். போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்ளின் பலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் போர் புரியும் திறனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன. பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும். இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன.
ஜெர்மனியில் ஆட்சி கவிழ்ந்தது. ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் ஜெர்மனி அரசாங்கம் கவிழ்ந்தது. பிரான்ஸ் அரசு கவிழ்ந்த சில நாட்களில் ஜெர்மனி அரசு கவிழ்ந்துள்ளது. ஐரோப்பா நாடுகள் அண்டை நாடுகள் இடையே இந்த விவாகரங்கள் தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.