முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? போலீசிடம் குஷ்பு சரமாரி கேள்வி..!!

Khushpu, a member of the National Commission for Women, who went to condole the families of those who died of liquor in Kallakurichi, went to the Kallakurichi police station and asked for some information.
04:27 PM Jun 26, 2024 IST | Chella
Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பு கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று சில தகவல்களை கேட்டறிந்தார்.

Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் பெண்கள். இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. இதையடுத்து, கருணாபுரத்தில் கள்ளச்சாராயதால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பு கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது? என காவல்துறையிடம் குஷ்பு கேள்வி எழுப்பினார். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்த அவர், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். ஆகவே, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Read More : ஜூன் 28ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்..!! த.வெ.க. சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்..!!

Tags :
kallakurichikushboo
Advertisement
Next Article