முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டெங்கு பாதிப்பு இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்...? அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய ஒன்று

What to do if you have dengue..
07:30 AM Aug 06, 2024 IST | Vignesh
Advertisement

டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு குடிநீரினை சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று அருந்தி பயன்பெற வேண்டும்.

Advertisement

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; பருவ காலம் தொடங்கும் போது அந்த காலத்தில் நோய்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் வருவதற்கு முன் நம்மை பாதுகாத்துக்கொள்வதே சிறந்த வழிமுறையாகும். எனவே இத்தருணத்தில் கொசுகள் உற்பத்தியாகாமல் தடுப்பதுடன், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தின் மூலம் அதிகரிக்க செய்யலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு குடிநீரினை சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று அருந்த டெங்குவின் தீவிர தன்மையும் குறையும், தட்டை அணுக்கள் குறையும் பட்சத்தில் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி ஆடாதொடை மணப்பாகு, பப்பாளி இலைச்சாறு போன்றவை பருகலாம். குறிப்பாக, இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு புகையை ஏற்படுத்தி அதை வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் பரவச் செய்தல் கொசுக்கள் விலகிச் சென்று விடும். வேப்பிலை, நொச்சி இலை, வெண்கடுகு இலை, பூண்டு, எலுமிச்சை தோல் சேர்த்து அகலமான பாத்திரத்தில் வைத்து புகை மூட்டி கொசுவை கட்டுப்படுத்தலாம்.

மழை காலங்களில் குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளை தவிர்த்தல். எளிய உடற்பயிற்சியான யோகாசனம், பிராணாயமம் போன்றவை தொடர்ந்து கடைபிடித்தல், அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உட்படாமல் பார்த்துக் கொள்ளுதல், நல்ல நிம்மதியான உறக்கம், சர்க்கரை நோய் ரத்த அழுத்தம், இரைப்பை நோய் போன்றவை இருந்தால் அவைகளின் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி திறம்பட வைத்துக் கொள்ள பக்க விளைவுகளற்ற எளிமையான சித்த மருந்துகளான அமுக்கிரா. சீந்தில், நிலவேம்பு, ஆடாதொடை நெல்லிக்காய் போன்றவைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தனியாகவோ, கூட்டு மருந்தாகவோ எடுத்துக் கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் பழங்கள். ஆரோக்கியமான உணவுகள், சிறுதானியம், பருப்பு போன்றவை எடுத்துக்கொள்ளலாம். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
DengueDengue virusSalem dt
Advertisement
Next Article