முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்...?

06:10 AM May 13, 2024 IST | Vignesh
Advertisement

10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்கின்ற தகவலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Certificate) சரிபார்த்து. அவற்றில் மாணவர் பெயர், பிறந்த தேதி, தலைப்பெழுத்து, புகைப்படம். பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின். தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சான்றொப்பமிட்டு மாணவர்களுக்கு அளித்திட வேண்டும்.

Advertisement

தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்க ஏதுவாக. அத்திருத்தங்களை பின்னர் பள்ளி கல்வித்துறையால் அறிவிக்கப்படும் நாளன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது மாற்றுச் சான்றிதழில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்ணை எழுதும் கலத்தில் "Refer Original Certificate" என்று குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article