For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"எப்புட்றா.?" உங்கள் வயது மற்ற கிரகங்களில்..? ஒரு சின்ன கணக்கு போட்டு பார்ப்போமா.!

06:02 AM Nov 29, 2023 IST | 1newsnationuser4
 எப்புட்றா    உங்கள் வயது மற்ற கிரகங்களில்    ஒரு சின்ன கணக்கு போட்டு பார்ப்போமா
Advertisement

ஒருவரது வயது என்பது அவரது பிறந்த வருடம் மற்றும் தேதி ஆகியவற்றில் இருந்து கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு ஒருவர் 01.01.2000 ஆண்டில் பிறந்திருந்தால் தற்போது அவரது வயது 23 வருடங்கள் மற்றும் 91 நாட்கள் இருக்கும். மக்களின் அடிப்படையில் பார்த்தால் 8,732 நாட்கள் என இருக்கும். அவரது அடுத்த பிறந்த நாள் 01.01.2024 தேதியில் வரும். ஆனால் இந்த கணக்கு நமது பூமியை சுற்றி இருக்கும் மற்ற அனைத்து கிரகங்களிலும் இதுபோன்று சமமாக இருப்பதில்லை இதே மனிதன் வேறு கிரகங்களில் இருந்தால் அவரது வயது எவ்வாறு இருக்கும் இதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம்.

Advertisement

இதே மனிதன் புதன் கிரகத்தில் 01.01.2000 ஆண்டு பிறந்திருந்தால் தற்போது அவருக்கு 99 வயது மற்றும் 26 நாட்களாக இருந்திருக்கும். நாட்களின் அடிப்படையில் பார்த்தால் அவர் பிறந்து 149 நாட்களை ஆகியிருக்கும். இதே மனிதன் வெள்ளி கிரகத்தில் பிறந்திருந்தால் தற்போது 38 வயது 86 நாட்களாக இருக்கும். அந்த மனிதன் அதே நாளில் செவ்வாய் கிரகத்தில் பிறந்திருந்தால் தற்போது 12 வயது 71 நாட்களாக இருக்கும். வியாழன் கிரகத்தில் பிறந்திருந்தால் 2 வயது 2 நாட்களாக இருக்கும். சனி கிரகத்தில் பிறந்திருந்தால் அவரது வயது வெறும் 81 நாட்களாக இருக்கும். யுரேனஸ் கிரகத்தில் அவர் பிறந்திருந்தால் தற்போது அவர் பிறந்து 28 நாட்களே ஆகி இருக்கும். அவர் நெப்டியூன் கிரகத்தில் பிறந்திருந்தால் 15 நாட்களாக இருக்கும். ப்ளூட்டோ கிரகத்தில் பிறந்திருந்தால் அவரது வயது வெறும் 1 நாட்களாக இருக்கும்.

ஒரு மனிதன் பூமியில் பிறந்ததற்கும் மற்ற கிரகங்களில் பிறப்பதற்கும் உள்ள வித்தியாசம் நம்மால் நம்ப முடியாத வகையில் இருக்கிறது. இதற்கு பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வரும் கால அளவே காரணமாக அமைகிறது. உதாரணமாக பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இது ஒரு நாள் என்று கணக்கிடப்படுகிறது. பூமி சூரியனை முழுவதுமாக ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இது ஒரு வருடம் என்று கணக்கிடப்படுகிறது.

அதேநேரம் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோள் சூரியனை ஒரு முறை முற்றிலுமாக சுற்றி வருவதற்கு 88 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது சூரியனை சுற்றிவரும் வேகம் மற்றும் சூரியனுக்கும் புதன் போல் இருக்கும் இடைப்பட்ட தூரம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. கோள்கள் மற்றும் சூரியனுக்கும் இடையேயான தூரம் காலங்களை நிர்வகிக்கிறது. சூரியனிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருக்கக் கூடிய புளூட்டோ கிரகம் சூரியனை ஒரு முறை முற்றிலுமாக சுற்றி வருவதற்கு 248 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. இதன் அடிப்படையில் மனிதனின் வயதும் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு மாறுபடுகிறது. இதன் காரணமாகத்தான் 2000 வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி பிறந்த ஒரு மனிதனின் வயது பூமியில் 23 ஆக இருக்கிறது. அதே மனிதனின் வயது புளூட்டோ கிரகத்தில் ஒரு நாளாக இருக்கிறது. இதற்குக் காரணம் அந்த கிரகத்தின் தூரம் மற்றும் அதன் சுழற்சியாவும். இவையாவும் கெப்லரின் சுற்றுப்பாதை இயக்க விதிகளின்படி தீர்மானிக்கப்படுகிறது.

Tags :
Advertisement