கோயில்களுக்கு அடிக்கடி செல்வதால் ஏற்படும் நன்மைகள்.. என்னென்ன தெரியுமா.!?
பொதுவாக கோயில்களுக்கு சென்றாலே அங்குள்ள அமைதியான சூழ்நிலையும், பக்திமயமான இடமும் நம் மனதிற்கு ஒரு அமைதியை அளிக்கிறது. காந்த அலைகள் பூமியில் அதிகமாக வீசப்படும் இடங்களில் தான் கோயில்கள் அமைந்துள்ளன. இதனால்தான் கோயில்களில் ஒரு விதமான ஈர்ப்பு சக்தியும், பாசிட்டிவ் எனர்ஜியும் நமக்கு கிடைக்கின்றன.
பல கோயில்களில் கர்ப்பகிரகத்தில் சிலைகளின் அடியில் செப்பு தகடு பதிக்கப்பட்டு இருக்கும். இந்த செப்பு தகடு கர்ப்பகிரகத்தில் காந்த சக்தியை மேலும் அதிகப்படுத்துகிறது. இதனாலேயே கர்ப்ப கிரகத்தின் அருகில் சென்று வணங்கும்போது நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உருவாகி அமைதி அடைகிறது.
மேலும் மந்திரம் சொல்லுவது, மணி அடிப்பது, தொடர்ந்து விளக்கு எறிவது போன்றவையும் சேர்ந்து அந்த இடத்திற்கு மிகப்பெரும் சக்தியை அளிக்கிறது. பொதுவாக நாம் வீடுகளில் ஒரு இடத்தில் இவ்வாறு தொடர்ந்து பல விளக்குகளை எரிய வைப்பது, தண்ணீர், பால், தயிர், நெய் போன்றவற்றை வைத்து அபிஷேகம் செய்தால் அந்த இடத்தில் இரண்டே நாட்களில் கெட்ட வாடை அடிக்கும்.
ஆனால் கோயில்களில் எவ்வளவு தான் அபிஷேகம் செய்தாலும், அதிகமான கற்பூரங்களை எரிய வைத்தாலும், தொடர்ந்து விளக்குகளை எரிய வைத்தாலும் அந்த இடத்தில் நல்ல வாசனையும், பாசிட்டிவான எனர்ஜியும் இருப்பதற்கு காரணம் அங்குள்ள காந்த சக்தி தான்.
மேலும் சொம்பு பாத்திரத்தில் வைத்து கொடுக்கப்படும் தீர்த்தமும், கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களும் நாம் வீட்டில் எவ்வளவு தான் பார்த்து செய்தாலும் அந்த சுவை நமக்கு கிடைக்காது. கோயிலில் கிடைக்கும் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தை சாப்பிட்டாலே போதும் பலருக்கும் உடல்நிலை சரியாகிவிடும். இவ்வாறு கோயிலுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நம் உடலுக்கும், மனதுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.