முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருவண்ணாமலையில் மட்டும் கார்த்திகை தீபம் பிரம்மாண்டமாக கொண்டாட என்ன காரணம்?… அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

08:52 AM Nov 22, 2023 IST | 1newsnationuser3
Advertisement

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என முன்னோர்கள் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு நினைத்தாலே முக்தி தரக் கூடிய அளவு திருவண்ணாமலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அண்ணுதல் என்றால் நெருங்குதல், அண்ணா என்றால் நெருங்க முடியாத, அதாவது திருமால் வராக அவதாரமாக சிவனின் அடியையும், அன்னமாக பிரம்மா முடியையும் காண முயன்று முடியாத நெருப்பு மலை என்பதால், அவர் அண்ணாமலை என்று பெயர் வந்தது. கைலாயத்தில் சிவன் இருப்பதால் கைலாய மலை சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

Advertisement

கார்த்திகை மாதத்தின் மிகப்பெரிய விசேஷங்களில் ஒன்றாக திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படும். திருவண்ணாமலையில் இருக்கும் மலை 260 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில், பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சைவர்களின் நம்பிக்கையின் படி, இந்த மலையானது கிருதா யுகத்தில் நெருப்பு மலையாக இருந்தது, திரேதா யுகத்தில் மாணிக்க மலையாக இருந்தது, துவாபர யுகத்தில் தங்க மலையாக இருந்தது. தற்போது கலி யுகத்தில் கல் மலையாக உள்ளது என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த திருத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மலையே சிவலிங்கமாக உள்ளது என்பது நம்பிக்கை. மேலும், முருகன், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், திருமால், பைரவர், பிரம்ம லிங்கம், பாதாள லிங்கம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. கிளி கோபுரம் (81 அடி உயரம்), மேற்கே பேய் கோபுரம் (1 அடி உயரம்),
மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்), தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்), வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

திருமால், பிரம்மாவுக்கு இடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட, அங்கு நெருப்பு பிழம்பாகத் தோன்றினார் ஈசன், இதில் அடி, முடியை யார் முதலில் பார்க்கிறாரோ அவரே திருமால். வராக (பன்றி) வடிவம் எடுத்து நிலத்தை குடைந்து ஈசனின் அடியைக் காணவும், பிரம்மா அன்ன வடிவம் எடுத்து பறந்து அவரின் முடியைக் காணவும் புறப்பட்டனர். பல ஆண்டுகள் ஆகியும் அடியை காண முடியாத திருமால் திரும்ப, மேலிருந்து விழுந்த தாழம்பூவைப் பிடித்து, நீ எங்கிருந்து வருகின்றாய் என கேட்க, சிவன் தலையில் சூடிப்பெற்றிருந்த நான், தவறி விழுந்து பல ஆண்டுகளாக கீழே வந்து கொண்டிருக்கின்றேன் என்றார். அப்போது நீ சிவனின் முடியைப், நான் பார்த்துவிட்டேன் என சாட்சி சொல்ல வேண்டும் என கேட்டார் பிரம்மன்.

சிவனின் முடியைப் பார்த்துவிட்டேன் இதனால் நான் வெற்றி பெற்றுவிட்டேன். என கூறி திருமாலை எள்ளிநகையாடினார். இதனால் ருத்திரனாக மாறிய சிவன், பொய்யுரைத்த தாழம்பூ இனி என் பூஜைக்கு பயன்படாது. அதோடு பத்ம கற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாய் என உரைத்தார். இனி உலகத்தில் உனக்கென தனி ஆலயம் அமையாது என கூறினார். பிரம்ம தேவர் மன்னிப்பு கேட்கவே, இனி சிவ லிங்கத்தில் அடிப்பகுதியில் பிரம்மன், நடுவில் விஷ்ணு, மேல் பாகத்தில் சிவனும் நின்று சிவ லிங்கமாக இங்கு தோன்றினார். சிவ லிங்கமாக தோன்றி நாள் தான் மகா சிவ ராத்திரி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
அப்படி என்ன சிறப்பு?கார்த்திகை தீபம்கொண்டாட என்ன காரணம்?திருவண்ணாமலை
Advertisement
Next Article