இளம் வயதில் முடி நரைப்பதற்கு உண்மையான காரணம் என்ன..? இதற்கு என்ன சிகிச்சை..? என்ன சாப்பிடலாம்..?
முடி நரைப்பதற்கு உண்மை காரணம் என்ன..? இந்த தலைமுறை இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. முடி நரைத்தல் என்பது மனிதனுக்கு இயல்பாக நடக்கூடிய விஷயமாகும். வயதான காலத்தில் முடியின் இயல்பான நிறம் போய் விடும் என்பதே முடி நரைத்தல் ஆகும். பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளின்படி, உலகில் 50 வயது மேற்பட்டவர்களில் 50 விழுக்காட்டினருக்கு 50% முடி நரைத்துவிடும். இந்த வயதில் பெரும்பாலான நபர்களுக்கு முடி நரைத்தல் என்பது இயல்பே.
வயதான காலத்தில் முடி நரைத்தல் பிரச்சனையை நோயாக கருத இயலாது. இளம் வயதினருக்கு முடி நரைத்தல் ஏற்பட்டால், பின்னணி காரணங்களை கட்டாயம் அறிய வேண்டும். நம் தலைமுடியின் நிறம் மெலனோசைட்டை பொறுத்து அமையும். இதில் உற்பத்தியாகும் மெலனின் தலை முடியின் கருமையை தீர்மானிக்கிறது. மெலனோசைட் செல்களில் பாதிப்பு ஏற்பட்டால், அதில் இருந்து வளரும் முடி நரைத்தே இருக்கும். வேரோடு முடியை பிடுங்கினால் அடுத்து வளரும் முடியும் நிறம் மாறிவிடும் என அர்த்தம் கிடையாது.
தைராய்டு ஹார்மோன்
தைராய்டு சுரப்பு குறைவு ஏற்பட்டால் தலைமுடி நரைக்கும். இதற்கான காரணத்தை சரி செய்தால் முடி நரைத்தலை தடுக்கலாம்.
மரபணு
மரபணு ரீதியாக இளநரை பிரச்சனை வந்தால் சிகிச்சை அளிக்க முடியாது. அப்பாவுக்கு இளம் வயதில் முடி நரைத்திருந்தால் மகனுக்கும் அதே பிரச்சனை வரும்.
சத்து குறைபாடு
பி 12 சத்து மற்றும் உடலில் ஃபோலிக் அமிலம் குறைபாடு இளநரை பிரச்சனைக்கான காரணங்கள் ஆகும். இரும்பு, ஜிங்க், செலீனியம் குறைபாடு இருந்தாலும் இளநரை ஏற்படலாம். இதனால் ஈரல், கீரை வகைகளை அதிகம் சாப்பிடுங்கள். முடிந்தவரை ரசாயனம் பயன்படுத்தாமல் இயற்கையான தோற்றத்தில் இருங்கள்.
Read More : ”ஏன்டா இப்படி குடிச்சி மானத்த வாங்குற”..!! கடுப்பான தந்தை..!! மகன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை..!!