முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை..? சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

04:31 PM Jan 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் மறைந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அதேபோல சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலமாக இந்த வழக்கை தொடர இருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை பொறுத்தவரையில் சட்டமன்றத்தில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களுடைய பதிலுரைகள் தற்போது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதே போல் சட்டமன்றத்தில் உறுப்பினருடைய பேச்சுகள் அவை குறிப்புக்கள் நீக்கப்படும் போது அவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வாய்ப்புள்ளதால் அந்த நடவடிக்கை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்பு இல்லை என்றும் அரசு தெரிவித்தது. இதனை கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோல, தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது? அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags :
சட்டமன்ற நிகழ்வுகள்சென்னை உயர்நீதிமன்றம்தலைமை நீதிபதிநேரடி ஒளிபரப்பு
Advertisement
Next Article