முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் என்ன..? அறிகுறி எப்படி இருக்கும்..? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Just hearing the word heart attack creates some kind of fear in everyone.
05:20 AM Oct 31, 2024 IST | Chella
Advertisement

ஹார்ட் அட்டாக் என்ற வார்த்தையே கேட்டாலே எல்லாருக்கும் ஒருவித பயம் வந்துவிடும். மாரடைப்பு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வருவதில்லை. பெரும்பாலானோர் அதை கவனிப்பதில்லை. சில பேர் மாரடைப்பின் அறிகுறிகள்தான் அவை என்றே தெரியாமல் இருப்பர். ஆனால், தற்போது சில பொதுவான அறிகுறிகளை வைத்து தாங்களாகவே மாரடைப்பை கணிக்கின்றனர். அதுவே, சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் அறிகுறிகள் எப்படி இருக்கும்? என்றே கணிக்க முடியாது. பொதுவான மாரடைப்பை போல் அல்லாமல் சைலண்ட் ஹார்ட் அட்டாக் வருவோருக்கு வலி கூட இல்லாமல் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். நிறைய சைலண்ட் ஹார்ட் அட்டாக் நோயாளிகளுக்கு அறிகுறிகள் குழப்பமாகவும், மோசமானதாகவும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாகவும் இருக்கும்.

Advertisement

சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் என்ன..?

எந்தவகை ஹார்ட் அட்டாக்காக இருந்தாலும் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடுத்து நிறுத்தப்படுகிறது. தமனிகள் மற்றும் ரத்தக்குழாய்களில் கொழுப்பு கட்டிகளாகி அடைப்பை ஏற்படுத்துவதால் இதயத்திற்கு கொண்டுசெல்லப்படும் ஆக்சிஜன் அளவு தடைபடுகிறது. அதேதான் சைலண்ட் ஹார்ட் அட்டாக்கிலும் நடக்கும். ஆனால் இதில் அறிகுறிகள் என்பது சிலநேரம் குறைவாக இருக்கும். சில நேரங்களில் அதுவும் இருக்காது.

சைலண்ட் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் என்ன?

தெளிவான அறிகுறிகள் தெரியாததால் சைலண்ட் ஹார்ட் அட்டாக் கவனிக்கப்படமால் போகிறது. ஆனால், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சில கவனிக்கத்தக்க அறிகுறிகள் சைலண்ட் ஹார்ட் அட்டாக் வருவதை உணர்த்தும் என்கின்றனர்.

மார்பில் அழுத்தம்

பொதுவான மாரடைப்பின்போது மார்புப்பகுதியில் தீவிர வலி இருக்கும். ஆனால், சைலண்ட் அட்டாக் வரும்போது மெலிதான வலி மற்றும் நடு மார்பில் அசௌகர்யம் ஏற்படும். மேலும், மார்புப்பகுதியில் சிரிது அழுத்தம் மற்றும் மார்பை பிழிவது போன்ற உணர்வு ஏற்படும். இவை நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக்கோளாறின் அறிகுறிகளாகவும் இருப்பதால் பெரும்பாலானோர் குழப்பமடைகின்றனர்.

உடலின் மற்ற பகுதிகளில் அசௌகர்யம்

மார்புப்பகுதியை தவிர, சைலண்ட் அட்டாக் வருவோருக்கு முதுகு, கைகள், வயிறு, கழுத்து மற்றும் தாடைப்பகுதிகளிலும் அசௌகர்யத்துடன் கூடிய வலி இருக்கும்.

மூச்சுவிடுவதில் சிரமம்

சைலண்ட் அட்டாக் ஏற்பட்டோருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்ற உணர்வுகளும் ஏற்படலாம் என்கின்றனர். இந்த அறிகுறிகள் நீண்ட நேரத்திற்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.

குளிர்ந்த வியர்வை

இது சைலண்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறி என்றே சொல்லலாம். காய்ச்சல் வந்தது போன்ற ஒரு உணர்வு. ஆனால், அது நீண்ட நேரத்திற்கு நீடிக்காது. ஏனெனில், இந்த குளிர்ந்த வியர்வை வேகமாக காணாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற உணர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.

Read More : 2,877 காலியிடங்கள்..!! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கொட்டிக் கிடக்கும் வேலை..!!

Tags :
அறிகுறிகள்சைலண்ட் ஹார்ட் அட்டாக்மருத்துவர்கள்ஹார்ட் அட்டாக்
Advertisement
Next Article