நரக வாழ்க்கை எப்படி இருக்கும்..? 3 நிமிடம் அனுபவித்து வந்த நபர் சொன்ன திகிலூட்டும் தகவல்..!!
நாம் இறந்ததற்கு பின் என்ன நடக்கும் என்பது பற்றி நமக்கு தெரியாததால் தான் மனித வாழ்க்கை சுவாரஸ்யமாக உள்ளது. அழிவு என்பது நம் உடலுக்கு மட்டும் தான்.. ஆன்மா ஒருபோதும் அழியாது என்று கூறுகின்றனர். மரணத்திற்கு பிறகு சிலர் சொர்க்கத்திற்கும், சிலர் நரகத்திற்கு கூறுவார்கள். ஆனால், இது பற்றி உண்மை என்னவென்று இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லை. இப்படி மனிதனின் மரணத்தில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, ஒருவரை உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய 3 நிமிடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் உயிர் பிழைத்துள்ளார். இதுகுறித்து ரெடிட் என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அந்த பயனர் 3 நிமிடங்களில் இறந்துவிட்டதாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த நபர் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். இதயத்துடிப்பும் நின்றுவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனால், அந்த நபர் 3 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பிழைத்துள்ளார். அந்த மூன்று நிமிட அனுபவத்தை பகிர்ந்த கொண்ட அவர், இருள் சூழ்ந்த குளிர்ந்த நீரில் மூழ்கியதாக கூறினார். அப்போது, உணர்ச்சி எதுவும் இல்லாதது போல் இருந்தது. ஆனால், ஒரு குளிர்ந்த பிரதேசத்தில் இருந்தது போன்று உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். 3 நிமிட நிமிடங்களுக்கு பிறகு கண் விழித்து பார்த்தபோது நரகத்தில் இருந்தது போன்று அனுபவம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாட்களில் தான் நரகத்தில் தான் இருந்ததாக அவர் உறுதி செய்ததாக கூறினார். இந்த விஷயத்தை அந்த நபரின் நண்பர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் பதிலளித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த ஒருவர், "ஆஹா.. இது என் அம்மா கண்ட கனவை நினைவூட்டியது. என் குழந்தைப் பருவத்தில் இதைப் பற்றி அவர் என்னிடம் கூறியுள்ளார். அவர் எழுந்தபோது அறையில் தீப்பிழம்புகள் இருப்பதையும், மக்கள் அலறுவதையும் பார்த்தாக தெரிவித்தார். மற்றொரு பயனர், "இது துல்லியமாக நரகம் போன்றது. நீங்கள் இருட்டில் தனியாக இருக்கிறீர்கள். நெருப்பு இல்லை, பேய்கள் உங்களை சித்திரவதை செய்யவில்லை. வெறும் இருள் மற்றும் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு" என்றார்.