“அப்போ, காசுக்காகத்தான் என்கூட பழகுனியா?” ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்..
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூரை சேர்ந்தவர் அருள். இவருக்கு கலைத்தாய் என்ற மனைவி உள்ள நிலையில், இவர் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக அங்கு வேலை செய்து வரும் கலைதாய்க்கும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிச்சந்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கலைத்தாய் ஹரிச்சந்திரனிடம் இருந்து, ரூபாய் 2 லட்ச பணத்தை கடனாக வாங்கியுள்ளார். ஆனால், அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்த கலைத்தாய், பணத்தை திருப்பி கேட்ட போது சரியான பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கலைத்தாய் வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த ஹரிச்சந்திரன், அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் கலைத்தாய் அவரது அழைப்பையும் ஏற்கவில்லை. காசுக்காகத்தான் கலைத்தாய் தன்னிடம் பழகியுள்ளார் என்று நினைத்து ஆத்திரம் அடைந்த ஹரிச்சந்திரன், கலைத்தாயை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக, அவர் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த பிரசாந்த் என்பவரின் உதவியை கேட்டுள்ளார். இதற்கு பிரசாந்த் சம்மதம் தெரிவித்த நிலையில், இருவரும் சேர்ந்து கலைத்தாயை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர். அதன் படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைத்தாய் வீட்டில் தனியாக இருப்பதை உறுதி செய்த இருவரும், அங்கு சென்று கலைத்தாயிடம் பணத்தை கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரம் அடைந்த அரிச்சந்திரன் பிரசாந்த்துடன் சேர்ந்து கலைத்தாயை வெட்டி கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கலைத்தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.