For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

CMDA/DTCP அப்ரூவல் என்றால் என்ன? வீட்டுமனை வாங்கும்போது அது ஏன் முக்கியம்?

06:20 AM May 17, 2024 IST | Baskar
cmda dtcp அப்ரூவல் என்றால் என்ன  வீட்டுமனை வாங்கும்போது அது ஏன் முக்கியம்
Advertisement

நிலமோ வீட்டுமனைகளோ எது வாங்கினாலும் ஏகப்பட்ட குழப்பங்கள் நமக்கு வரும். முக்கியமா, சிஎம்டிஏ (CMDA) அப்ரூவல்னு சொல்றாங்க, டிடிசிபி (DTCP) அப்ரூவல்னு சொல்றாங்க. இன்னும் சிலர் பஞ்சாயத்து அப்ரூவல் இருந்தா போதும்னு சொல்றாங்க. இதில் எதுதான் சரி? CMDA/DTCP அப்ரூவல் என்றால்தான் என்ன?

Advertisement

நாம் வாங்குற நிலம் நகர எல்லைக்குள் இருந்தா அதுக்கு சிஎம்டிஏ (CMDA - Chennai Metropolitan Development Authority) அப்ரூவல் வாங்கணும். குடியிருப்புகளைக் கட்டி விற்கும் புரோமோட்டர்களிடமிருந்து நீங்கள் வாங்குவதாக இருந்தால் அவர்களுடைய லே-அவுட் வரைபடத்தைக் கேட்டு வாங்கி, அதில் சிஎம்டிஏ அப்ரூவல் நம்பர் இருக்கிறதா என்று பாருங்கள். மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் கட்டப்பட்டிருந்தால் அது முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்பதை ஒரு லாயர் மூலமாகத் தெரிந்துகொள்வது அவசியம். இரண்டு கட்டடங்களுக்கு இடையே போதுமான இடைவெளி உள்ளதா, அரசாங்க வரைமுறைகளுக்குட்பட்டு இருக்கிறதா போன்றவற்றைச் சரிபார்த்த பின்னரே பத்திரப்பதிவுக்குச் செல்ல வேண்டும்.

நீங்கள் வாங்கும் மனை, சென்னை மெட்ரோ எல்லைக்கு வெளியே இருந்தால் அந்த மனைக்கு டிடிசிபி (DTCP - Directorate of Town & Country Planning) அப்ரூவல் பெற்றிருக்க வேண்டும். இந்த அப்ரூவலை நீங்கள் ப்ளாட்/அபார்ட்மென்ட் வாங்கும் பில்டர் அல்லது புரோமோட்டர்கள் வாங்கியிருக்க வேண்டியது அவசியம். அந்த டிடிசிபி அப்ரூவல் எண்ணை நீங்கள் கேட்டுப் பெறுதல் வேண்டும். டிடிசிபி அப்ரூவல் பெற்ற மனை உள்ள சாலையின் அகலம், பொதுமக்கள் பயன்படுத்த பூங்காக்கள் போன்ற விஷயங்களைக் கணக்கில்கொண்டே அனுமதி அளிக்கப்பட்டிருக்கும்.

நகரத்துக்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒவ்வொரு பகுதியும் கிராமப்புறப் பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்பின் கீழ் வரும். இவை, கிராமப்புற முன்னேற்றத்துக்காக வீடுகள் கட்ட அனுமதி கொடுத்து வந்தன. இதற்கும் டிடிசிபி அப்ரூவல் பெற வேண்டும் என்பதுதான் விதி. முன்பு பட்டா இருந்தாலே பஞ்சாயத்து அப்ரூவல் பெற்று, வீடு கட்டலாம் என்ற ஒரு நிலை இருந்தது. புதிய கட்டுமானங்களால் கிராமப் பஞ்சாயத்துக்கு வருவாய் கிடைக்கும் என்பதால் நிறைய கட்டடங்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. ஆனால், இரண்டு வருடங்களுக்குள் வீடு கட்டாமல் போனால் மீண்டும் அனுமதி பெற வேண்டியது அவசியம். மேலும் டிடிசிபி அல்லது சிஎம்டிஏ அப்ரூவல் இல்லாத மனையில் வீடு கட்டினால் சிக்கல்தான். ஆகையால், வீடு அல்லது ப்ளாட் வாங்கும்போது இந்த அப்ரூவல் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

Read More: சரத்குமாரை சீண்டிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.. புகார் அளித்த ராதிகா சரத் குமார்!

Advertisement