காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றால் என்ன.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
பருவமழை காலங்களில் போது தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அந்தப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனக் கூறுவதை கேட்டிருப்போம். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்றால் என்ன.? அது எவ்வாறு உருவாகிறது. இது மழை பொழிவிற்கு எப்படி காரணமாகிறது.? என்பதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.
பூமியில் எல்லா இடங்களிலும் காற்று பரவி இருக்கிறது.காற்றின் அழுத்தம் பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருள்களின் மீதும் இருக்கிறது. எல்லா பகுதிகளில் இருந்தும் சம அளவில் காற்றின் அழுத்தம் இருப்பதால் நம்மால் அதை உணர முடியவில்லை. கடல் மட்டத்தின் மேற்பரப்பில் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்போது நீராவியாதல் நடைபெறுகிறது. இதனால் வளிமண்டலத்தில் வெற்றிடம் உருவாகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக உயர் காற்றழுத்தம் உள்ள மண்டலங்களில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி காற்று நகர்ந்து வருகிறது.கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் 2013 மில்லிபாராக இருக்கிறது.
வானிலை ஆய்வாளர்கள் வானிலை அறிக்கை கண்டறிவதற்காக காற்றழுத்தங்களை கொண்டு வரைபடங்கள் வரைகின்றனர். காற்றின் அழுத்தத்தை கணிக்கும் கருவியின் பெயர் பேரோ மீட்டர்(barometer). இவற்றை பயன்படுத்தி வரைபடம் வரையும் போது ஒரே விதமான அழுத்தம் இருக்கும் பகுதிகளை நேர்கோடுகள் மூலம் இணைக்கின்றனர். இவை ஐஸஓபஎர்(isober) என்று அழைக்கப்படுகிறது. மேலும் காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளில் 'எல்' என்றும் காற்றழுத்தம் உயர்வாக உள்ள பகுதிகளில் 'எச்' என்றும் குறிப்பிடுகின்றனர்.
அந்த வரைபடத்தில் 'எல்' என்று குறிப்பிடப்படும் இடங்கள் தான் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் என அழைக்கப்படுகின்றன. தண்ணீர் உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான இடத்தை நோக்கி பாய்வது போல காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி வீசுகிறது. காற்றுடன் சேர்ந்து மேகங்களும் அந்த பகுதியை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் மழைப்பொழிவு ஏற்படுகிறது. எனவேதான் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை கண்டறிவதன் மூலம் வானிலை அறிக்கையின் மழை பொழிவை கணிப்பதற்கும் எச்சரிக்கைகள் கொடுப்பதற்கும் பயனுள்ளதாக அமைகிறது.