For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”நான் செய்தது தவறுதான்”..!! உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

01:52 PM Mar 22, 2024 IST | 1newsnationuser6
”நான் செய்தது தவறுதான்”     உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர் என் ரவி
Advertisement

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டார்.

Advertisement

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் அவரை மீண்டும் அமைச்சராக்க பரிந்துரைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘பொன்முடிக்கு பதவியேற்பை ஆளுநர் நடத்தாதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நாளை (இன்று) வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம். இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து பொன்முடியை பதவியேற்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார். இந்நிலையில், பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டுள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதிவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்ட தகவல் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More : Candidates | தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு..!! தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் வெயிட்டிங்..!!

Advertisement