For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு தனி இருக்கைகள்...! 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல்...!

Separate seats for women travelling in government buses
07:15 AM Nov 24, 2024 IST | Vignesh
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு தனி இருக்கைகள்      8 682 புதிய பேருந்துகள் கொள்முதல்
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-க்குப் பிறகு 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 1967-இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் தமிழக சட்டப்பேரவையில் 20.3.1967 அன்று அளித்த 1967-1968ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், போக்குவரத்துத் துறையில் 75 மைல்களுக்கு மேற்பட்ட பேருந்து தடங்களை, அவை காலாவதி ஆகஆக அரசு நாட்டுடைமையாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன்படி, போக்குவரத்துறை அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞைர் அவர்கள் 75 மைல்களுக்கு மேலான 96 தடங்கள்: அவற்றில் 124 பேருந்துகள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கினார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய போக்குவரத்துக் கழகங்கள்

முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள். பொதுப்பணித்துறை அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் முன்னிலையில் காஞ்சிபுரத்தில் முதன்முதலில் சென்னை ஆரணி தடத்தில் 1967-ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் அன்று நாட்டுடைமை ஆக்கப்பட்ட முதல் பயணத்தைத் தொடங்கி வைத்தார்கள்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேருந்துகளைச் சிறப்பான முறையில் மக்களுக்குப் பயன்படச் செய்யும் வகையில் 1.1.1972 முதல் பல்லவன் போக்குவரத்துக் கழகம். பின்னர் சோழன் போக்குவரத்துக் கழகம், பாண்டியன் போக்குவரத்துக் கழகம், சேரன் போக்குவரத்துக் கழகம் முதலான LIGU போக்குவரத்துக் கழகங்களைத் தொடங்கினார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கினார்.

போக்குவரத்துத் துறையில் திராவிட நாயகர் ஆட்சியில் புரட்சிகரமான திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-இல் பொறுப்பேற்றது முதல் மகளிர் முன்னேற்றத்திற்காகப் புரட்சிகரமான பல திட்டங்களைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் முதன்மையான திட்டம் முதன்முதல் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் "மகளிர் விடியல் பயணத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புரட்சிகரமான விடியல் பயணத் திட்டம் மகளிரின் வாழ்வில் விளக்கேற்றும் திட்டம் என்று அனைவராலும் பாராட்டப்படுகிற திட்டம் ஆகும்.

திட்டக் குழு ஆய்வு முடிவு தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு, திருப்பூர் (தொழில்), மதுரை (வர்த்தகம்) மற்றும் நாகப்பட்டினம் (வேளாண்மை) ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திரச் செலவில் சுமார் ரூ.888/- சேமிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.இந்த மாபெரும் திட்டத்தில் 31.10.2024 வரையில் 570.86 கோடி பயண நடைகள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது: ஒரு நாளில் 57.07 இலட்சம் மகளிர் பயணம் மேற்கொள்கின்றனர்.

மெட்ரோ இரயில் நிலைய இணைப்புப் பேருந்து: மெட்ரோ இரயில் பயணிகள் விரைவாகப் பயணம் மேற்கொள்ள உதவும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 56 இணைப்புச் சிற்றுந்துகள். சென்னையில் 30 மெட்ரோ இரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.

8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-க்குப் பிறகு 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதில், 31.10.2024 வரை 2,578 புதிய பேருந்துகள் வரப்பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

பழைய பேருந்துகளைப் புதுப்பித்தல்: 2022-2023 ஆம் நிதியாண்டில் 1,000 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்க ரூ.130 கோடியும், 2023-2024ஆம் நிதியாண்டில் 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்க ரூ.76.34 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மொத்தம் 1,500 பேருந்துகளில் 31.10.2024 வரை 1,310 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு; மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது; எஞ்சிய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மகளிர் பாதுகாப்பான பயணத்திற்குப் புதிய முயற்சிகள் : அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய கண்காணிப்புக் கேமரா, இருக்கைகளில் அவசர அழைப்புப் பொத்தான் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 2,500 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் வருகின்றன. தற்போது 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 63 இடங்களில் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்களுக்குத் தனி இருக்கைகள் ஒதுக்கீடு: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் தனியாகப் பயணம் செய்வதற்கு வசதியாக பெண்களுக்கெனத் தனியே 4 இருக்கைகள் ஒதுக்கப்பட்டு 8.5.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement