கனவில் இறந்தவர்கள் வந்தால் என்ன நடக்கும்? அதுக்கு பின்னாடி இவ்வளவு அர்த்தம் இருக்கா?
பொதுவாக நாம் அனைவருமே தூக்கத்தில் கனவு காண்போம். நம் நினைவுகளின் கற்பனை வடிவம் தான் கனவு என்று சிலர் கூறுகின்றனர். மேலும் நம் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிப்படுவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் நாம் காணும் எல்லா கனவுகளுக்கும் ஒரு பலன் உள்ளது என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி நாம் காணும் கனவின் நேரத்தை பொறுத்து கனவின் பலன்கள் கிடைக்குமாம். அதாவது மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை காணு கனவு 1 வருட காலத்தில் பலிக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே போல் இரவு 8.30 முதல் 10.30 வரை காணுவு கனவு 3 மாதங்களிலும், நள்ளிரவு 1 மணி முதல் 3.30 வரை காணும் கனவு 1 மாதத்திலும் பலிக்கும் என்று கனவு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகாலை 3.36 முதல் காலை 6 மணிக்குள் வரும் கனவு உடனடியாக பலிக்கும் என்றும் நம்பப்படுகிறது. பகலில் காணும் கனவுகள் பெரும்பாலும் பலிக்காது என்றும் கூறப்படுகிறது. சரி, இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
தெரியாத நபரின் மரணம் : தெரியாத அல்லது அந்நியர் இறந்துவிட்டதாக நீங்கள் கனவு கண்டால், அது உங்கள் வாழ்க்கையில் சில தீர்க்கப்படாத பிரச்சினைகள் அல்லது அச்சங்கள் உள்ளன என்பதற்கான அறிகுறியாகும்.
உங்களுக்கு மிகவும் பிடித்த நபரின் மரணம் : ஒரு அறிமுகமானவர் அல்லது அன்பானவர் ஒரு கனவில் இறந்தால், அது உங்கள் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகும். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அல்லது பழைய பிரச்சினைகளை தீர்க்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் கனவில் வரும் போது, அவர்கள் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் தோன்றினால், அது ஒரு நல்ல சகுனம். இது உங்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும், மேலும் உங்கள் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை நீங்கள் காண முடியும்.
இறந்தவர் கனவில் உங்களிடம் ஏதாவது செய்யச் சொன்னால், உங்களுக்கு சில வேலைகள் அல்லது பொறுப்புகள் முடிக்கப்படாமல் உள்ளன, அதை நீங்கள் முடிக்க வேண்டும் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் கனவில் கோபமாக இருந்தால், அது உங்கள் உணர்ச்சிகளை குறிக்கும். அதாவது உங்களால் வெளிப்படுத்த முடியாத சில வலி அல்லது கோபம் உங்களுக்கு இருக்கலாம், அது கனவில் வெளிப்படும்.
இறந்தவர்கள் உங்களுடன் தூங்குவது போல் கனவு கண்டால், பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்க போகிறீர்கள் என்று அர்த்தம். இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு வந்தால் நற்புகழும், செல்வ செழிப்பும் கிடைக்குமாம். நாமே இறப்பது போல் கனவு கண்டால் நமது ஆயுள் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.