பெண்களே..!! வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ரூ.35 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்..!! முதலீடும் கம்மிதான்..!!
வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்து வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யலாம். அந்த வகையில் தையல் தொழில், கேக் செய்வது, ஊறுகாய் தயாரிப்பது, ரெடிமேட் சப்பாத்தி, மாவு வியாபாரம், மசாலா பொடி செய்யும் தொழில் என சொல்லிக்கொண்டே போகலாம்.
நீங்கள் வீட்டில் இருந்தபடியே ரூ.35,000 வரை சம்பாதிக்கலாம். இதுகுறித்த ஓர் தொகுப்பை பார்க்கலாம். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் தங்களின் அன்றாட வேலைகளை கூட செய்து கொள்ள நேரமில்லாத காரணத்தால் அனைவரும் இன்ஸ்டன்ட் காஃபி, டீ, ரெடிமேட் சப்பாத்தி போன்றவற்றை நாடி செல்கின்றனர். தற்போது இன்ஸ்டண்ட் இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலும் நல்ல லாபம் கிடைக்கிறது.
எப்படி தயாரிப்பது..? முதலில் இதற்கு தேவையான மூலப்பொருள் என்னவென்றால், இடியாப்பம் மாவு, உப்பு, தண்ணீர், இடியாப்பம் மேக்கிங் மெசின். இது ஒரு உணவு சம்பந்தபட்ட தொழில் என்பதால், FSSAI ஆவணம் கண்டிப்பாக தேவைப்படும். அதேபோல், நீங்கள் தயாரிக்கும் இன்ஸ்டண்ட் இடியாப்பத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டுமென்றால் ஜிஎஸ்டி பதிவு பெற்றிருக்க வேண்டும்.
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் இடியாப்பம் மாவு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளுங்கள், பின்னர், அதனை மேக்கிங் மெஷினில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மிஷினை ஆன் செய்துவிடுங்கள். அதுவே நமக்கு தேவையான இடியாப்பத்தை தயாரித்து கொடுத்துவிடும். பிறகு அதனை பேக்கிங் மெஷினை பயன்படுத்தி பேக்கிங் செய்துகொள்ளுங்கள்.
இதையடுத்து, நீங்கள் தயாரித்து இன்ஸ்டண்ட் இடியாப்பத்தை மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விற்பனை செய்யலாம். ஆன்லைன் மூலமாகவும் விற்கலாம். தோராயமாக 1 கிலோ இடியாப்பத்தின் விலை ரூ.490 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றால், நீங்கள் ஒரு 10 கிலோ வரை விற்பனை செய்கிறீர்கள் என்றால், ரூ.4,900 முதல் 5,000 வரை சம்பாதிக்கலாம். தோராயமாக 34,000 ரூபாய் முதல் 35,000 வரை சம்பாதிக்கலாம்.
Read More : தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய புயல்..? பாதிப்புகள் பயங்கரமா இருக்கும்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!