உணவுடன் இதை சேர்த்து சாப்பிடும்போது கவனமா இருங்க..!! அதிகமா போச்சுனா ஆபத்துதான்..!!
பெரும்பாலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குறிப்பாக காலை உணவில் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாக வெண்ணெய் இருக்கிறது. இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்ஸ்களான ஏ, ஈ மற்றும் கே2 ஆகியவை உள்ளன. இவை நம்முடைய பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர இவை பார்வை ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் அவசியமாகிறது.
எனினும், வெண்ணெய் நம் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அதே சமயம் மிதமான அளவில் வெண்ணெய் எடுத்து கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும் என்றும் சிலர் கூறுகின்றனர். இதில் எது உண்மை என்ற குழப்பம் உங்களுக்கும் இருக்கிறதா? வெண்ணெயை அளவோடு உட்கொண்டால் மட்டுமே அது ஆரோக்கியமான டயட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதே உண்மை.
வெண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், வாங்கி பயன்படுத்த நினைக்கும் போது மலிவு விலை தயாரிப்பை வாங்காமல் ஹை-குவாலிட்டி பட்டர்-ஐ வாங்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் டயட்டில் நீங்கள் வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் ஆலிவ் ஆயில், அவகேடோ போன்ற பிற கொழுப்பு உணவுகளுடன் அதனை பேலன்ஸ் செய்து வெவ்வேறு கொழுப்புகளின் சமநிலையை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
வெண்ணெய் அதிகமாக சேர்த்து கொண்டால் என்ன ஆகும்? வெண்ணெயில் சேச்சுரேட்டட் ஃபேட் அதாவது நிறைவுற்ற கொழுப்பு அதிகம். எனவே, இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொலஸ்ட்ராலின் லெவல் அதிகரிக்கக் கூடும் மற்றும் இதன் தொடர்ச்சியாக இதய நோய் அபாயம் ஏற்படும். வெண்ணெயில் கலோரி அதிகம் உள்ளது. எனவே, அதிகளவு இதனை உட்கொள்வது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். பல ஆய்வுகளின்படி, பிளட் லிப்பிட் லெவல்ஸ்களில் வெண்ணெய் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, இதய கோளாறுகள் அல்லது கொலஸ்ட்ராலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் டயட்டில் வெண்ணெயை மிதமான அளவிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Read More : நடிகர் சித்தார்த்துக்கு டும் டும் டும்..!! மணப்பெண் யார் தெரியுமா..?