மரணத்திற்கு பின் என்ன நடக்கும்..? ஆன்மா எங்கு செல்லும்? மர்மங்களை உடைக்கும் கருடபுராணம்..
கருட புராணம் இந்து மதத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகும். இந்த கருட புராணத்தில் மனிதர்களின் வாழ்க்கை, மரணம், அதன் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதன் செய்யும் பல்வேறு கர்மாக்களுக்குரிய தண்டனைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. கருட புராணம் மரணம் தொடர்பான மர்மங்களைப் பற்றி கூறுகிறது.
ஒருவருக்கு மரணம் ஏற்படும் முன்பு அவருக்கு பல அறிகுறிகள் தோன்றும். அவரின் உடலிலும் நடத்தையிலும் பல வகையான மாற்றங்கள் ஏற்படத் தொடங்குமாம். ஒருவர் இறக்கும் நேரத்தில் அவரது உடலில் என்ன நடக்கும்? ஆன்மா உடலை விட்டு எப்படி வெளியேறுகிறது? கருட புராணத்தில் இதுகுறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
வாழ்வின் தவிர்க்க முடியாத விஷயம் தான் மரணம். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் என்றாவது ஒரு நாள் இறக்க தான் போகிறார். உறுதி. நற்செயல்கள் செய்பவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு, மகாவிஷ்ணுவின் தலமான வைகுண்டத்தில் இடம் பெறுகிறார்கள். பாவம் செய்பவர்கள், தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் நரக வேதனையை அனுபவிக்க வேண்டும். சரி, ஒருவர் இறக்கும் நேரத்தில், அவரது உடலில் என்ன நடக்கிறது? ஆன்மா உடலை விட்டு எப்படி வெளியேறுகிறது?
மரணத்திற்கு முன் என்ன நடக்கும்?
கருட புராணத்தின் படி, மரணம் என்பது ஒரு நேரம். மரண நேரம் வரும்போது, ஆன்மா உடலிலிருந்து பிரிந்து விடுகிறது. மரணம் எப்போதும் அதன் சொந்த நேரத்தில் வருகிறது. ஒவ்வொரு உயிரினமும் காலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சத், ராஜ், தம் இந்த மூன்று குணங்களும் காலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவை காலத்திற்கு ஏற்ப உயிரினங்களில் விரிவடைகின்றன. ஒரு உயிரினத்தின் மரணம் வரும்போது, அதற்குச் சில காலங்களுக்கு முன், தெய்வீக யோகத்தால், அவனுடைய உடம்பில் ஏதோ ஒரு நோய் உண்டாகிறது.
மரணத்தின் போது என்ன நடக்கும்?
மரணத்தின் போது, அனைத்து புலன்களும் அமைதியற்றதாக மாறும், வலிமை, ஆற்றல் மற்றும் வேகம் அனைத்தும் பலவீனமாகின்றன. உயிரினங்கள் உணரும் வலி மில்லியன் கணக்கான தேள்களின் கடியைப் போன்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மரணத்தால் ஏற்படும் வலி எவ்வளவு கொடுமையானத் என்று. பின்னர் உடல் ஜடமாகிறது..
அந்த நேரத்தில், மரணத்தின் தூதர்கள் அருகில் வந்து நிற்பார்களாம், அவர்கள் அந்த நபரின் ஆன்மாவை வலுக்கட்டாயமாக இழுக்கத் தொடங்குவார்களாம். அந்த நேரத்தில், ஆன்மா தொண்டைக்கு வருகிறது. அதன் பிறகு, மரணத்தின் தூதர்கள் உடலில் வாழும் ஆத்மாவை யம்லோக்கிற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. பின்னர். மனிதனின் ஆன்மா பிரிந்து செல்கிறது.
பொய் சொல்லாதவர்களும், ஏமாற்றாதவர்களும், விசுவாசிகளாகவும், பக்தர்களாகவும் இருப்பவர்களுக்கே நல்ல மரணம் கிடைக்கும். நல்லொழுக்கமும், சாந்தமும் உடையவர்கள், மகிழ்ச்சியுடன் இறப்பதாகவும் நம்பப்படுகிறது.. அறியாமை, பொய் பேசுபவர்கள், ஏமாற்றுபவர்கள் போன்றவர்கள் சுயநினைவின்றி மரணம் அடைவார்களாம். மரணத்தின் தூதர்கள் அவர்களை அழைத்துச் செல்வார்களாம்.
ஆன்மா உடலை விட்டு எப்படி வெளியேறுகிறது?
ஒரு நபர் இறக்கும் போது, அவரது ஆன்மா கண்கள், மூக்கு அல்லது தோல் துளைகள் வழியாக உடலை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. ஒரு புத்திசாலி அல்லது நல்ல மனிதனின் ஆன்மா அவனது மூளையின் மேல் பகுதியில் இருந்து வெளியேறுமாம். அதே சமயம் கெட்டவர்களின் ஆன்மா அவரின் ஆசனவாயிலிருந்து வெளியேறுமாம்.
மரணத்திற்கு பின் என்ன நடக்கும்?
கருட புராணத்தின் படி, ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்மா வெகுதூரம் பயணிக்கிறது. முதலில் ஆன்மா யமலோகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பிறகு, இறந்தவரின் செயல்கள் யமராஜா முன் கணக்கிடப்படுகின்றன. அதிக பாவங்கள் செய்திருந்தால், யமதூதர்கள் ஆன்மாவை தண்டிப்பார்கள். நல்ல செயல்கள் செய்திருந்தால், பயணம் மிகவும் வசதியாக இருக்கும்.
மரணத்திற்குப் பிறகு 3 நாட்கள் முதல் 40 நாட்களுக்குள் மறுபிறவி வரும் என்று நம்பப்படுகிறது. கருட புராணத்தின் படி, ஒருவரின் மறுபிறவி அவரது கர்மாவைப் பொறுத்து மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. பாவங்கள் செய்த ஆன்மா நரகத்திற்கும், புண்ணியம் செய்த ஆன்மா சொர்க்கத்திற்கும் அனுப்பப்படுகிறது என்றும் நம்பப்படுகிறது.
Read More : தலைகீழாகும் பூமி!. வட துருவத்தில் ரஷ்யாவை நோக்கி வேகமாக நகரும் காந்தப்புலம்!. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!