முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகத்தில் என்ன சாதித்தார்கள்?… 70 ஆண்டுகால ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும்!… அண்ணாமலை சூளுரை!

06:20 AM Jan 30, 2024 IST | 1newsnationuser3
Advertisement

தமிழகத்தில் ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் மக்களின் நலனின் அக்கறை செலுத்தவில்லை. எனவே, 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் மூலம் தமிழகத்தில் 70 ஆண்டுகால ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள் என்ற பாதயாத்திரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் மக்களின் நலனின் அக்கறை செலுத்தவில்லை. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. தமிழகத்தில் 70 ஆண்டுகால ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறினார். நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. தமிழகத்தில் கல்வித்திறன் மோசமான நிலையில் உள்ளது. சாதாரண தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கின்றனர்.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் மூன்று மொழிகளை மாணவர்கள் கற்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் இரு மொழி கல்வியை கற்கின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அரசு வந்த பிறகு வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை. உளுந்தூர்பேட்டையில் தொழில் வளர்ச்சி வேண்டும். 2024 தேர்தலில் 400 எம்.பி.க்களை தாண்டி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை மோடி அமைப்பார். தமிழகத்தின் 38 எம்.பி.,க்கள் ஏதாவது சாதித்தார்களா? மோடியை எதிர்க்கும் ஆளுமை மிக்க தலைவர்கள் யாரும் இல்லை என்று பேசியுள்ளார்.

Tags :
70 ஆண்டுகால ஆட்சிannamalaiஅண்ணாமலை சூளுரைதமிழகத்தில் என்ன சாதித்தார்கள்?மாற்றி அமைக்க வேண்டும்
Advertisement
Next Article