தூங்க செல்லும் முன் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! என்ன நடக்கும் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
அதிகாலை 1 மணிக்குள் தூங்கச் சென்றால், மனிதர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஒரு வயது வந்தவர் 7 முதல் 9 மணி நேரம் வரை இடைவிடாது தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுந்து விடுவது என்பது உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்படும் நடைமுறையாக இருக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் தூக்கத்திற்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.
மனநல ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், அதிகாலை 1 மணிக்குள் படுக்கைக்குச் செல்வதால் பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன மற்றும் நடத்தை சீர்குலைவுகளின் அபாயத்தைக் குறைக்கும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. 74,000 பேரின் தூக்க முறைகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளரின் விருப்பமான தூக்க நேரத்தை, க்ரோனோடைப் எனப்படும் அவர்களின் உண்மையான தூக்க பழக்கங்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.
தூக்கம் ஒருவரின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தபோது, சரியான நேரத்தில் தூங்குபவர்களுக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. அத்துடன் தூக்க நேரம் மற்றும் ஆழ்ந்த தூக்கம் குறித்து ஆய்வு செய்தபோது, தூக்கத்தை ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் மேற்கொள்வது மிகவும் நல்லது என்றும், தாமதமாக தூக்கம் வருவது, மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் தெரியவந்துள்ளது. அதிகாலை 1 மணிக்குப் பிறகு தூங்கச் செல்வதை குறிக்கும் வகையில், இரவு ஆந்தைகள் எனக் கூறப்படுவோருக்கும், சீக்கிரம் தூங்குபவர்களுக்கும் இடையே இருக்கும் மனநலக் கோளாறுகள் பெரிய வித்தியாசத்தை கொடுத்திருப்பதாகவும், காலையில் சூரிய உதயத்துடன் எழுந்திருப்பவர்களுக்கு சிறந்த மன நல விளைவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Read More : “எப்போதும் போதையில் உலா வரும் சுறாக்கள்”..!! அதுவும் கொக்கைனாம்..!! விஞ்ஞானிகள் அதிர்ச்சி கண்டுபிடிப்பு..!!