பெண்களே..!! உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா..? இந்த பிரச்சனை இருக்கா..? இதுக்கு தீர்வு தான் என்ன..?
பொதுவாகவே, ஒரு பெண்ணின் வாழ்க்கை முறை திருமணமானதும் முற்றிலும் மாறிவிடும். அதுவரை அவர்களின் வாழ்க்கை முறை ஒன்றுதான். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பிறகோ அது வேறுவிதமாக மாறுகிறது. காரணம், பெண்களின் வழக்கமான வேலைகளில் மாற்றங்கள், புதிய பொறுப்புகள், குடும்ப உறுப்பினர்களின் செலவுகள் போன்றவற்றை இவர்களே சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு சிந்திக்க நேரமில்லை.
திருமணத்திற்குப் பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிப்பது சகஜம் தான். ஆனால் எல்லோரும் எடை கூடுகிறார்களா? என்றால் இல்லை. ஆனால், பெரும்பான்மையானவர்களில் இந்த மாற்றம் கண்டிப்பாக இருக்கும். எனவே, திருமணத்திற்கு பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன? இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. சொல்லப்போனால், அவர்கள் தங்கள் பராமரிப்பதை பற்றி முற்றிலும் மறந்துவிடுகின்றனர். உதாரணமாக, திருமணத்திற்கு முன் உடற்பயிற்சி செய்தவர்கள், திருமணத்திற்கு பிறகு திடீரென உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டால், உடல் எடை கூடுவதற்கு வாய்ப்பு அதிகம். பொதுவாகவே, திருமணத்திற்குப் பிறகு புதிய பொறுப்புகள் வந்து சேரும். அதுவரை ஜாலியாக இருந்தவர்கள் திடீரென்று புதிய இடத்துக்குச் சென்று புதிய பொறுப்புகள் வருவதால், பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.
இதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகரித்து பசியைத் தூண்டுகிறது. இதனால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிடுவதால், எடை அதிகரிக்கும். மேலும், திருமணமான புதிதில் சாப்பிடும் உணவிலும் இயற்கையாகவே மாற்றங்கள் ஏற்படும். கூடுதலாக, உடற்பயிற்சியும் குறைக்கப்படுவதால், உடல் எடை கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த பிரச்சனையில் இருந்து விடுபட கண்டிப்பாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி அல்லது சிறிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மேலும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம்.
Read More : கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி..!! சி.என்.ஜி. எரிவாயு விலை மேலும் உயருகிறது..!!