புரட்டாசியில் எந்தெந்த விஷயங்களை செய்யக்கூடாது..? விரதம் இருந்து வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா..?
இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதங்களில் புரட்டாசி மாதமும் ஒன்று. இந்த மாதத்தில் நல்ல காரியங்கள் செய்யலாமா? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதற்கான விடையை இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க...
ஜோதிடத்தின் படி, சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய மாதம், புரட்டாசி மாதம். இந்த மாதம் பெருமாளுக்கு மிக அற்புதமான மாதமாக பார்க்கப்படுகிறது. அதுவும் இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை விரதம் மற்றும் பெருமாள் வழிபாடு மிகச் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளயபட்ச கால விரதம், மகாளய அமாவாசை விரதம் மிக விஷேசமானது.
இந்த காலத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க உரியது. மேலும், இம்மாதத்தில் நவராத்திரி பண்டிகை அம்பாளை வேண்டி வழிபடக்கூடிய மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும். இப்படி பல இறைவழிபாடு, விஷேசங்கள் வரக்கூடிய, இறைவனுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட மாதம் புரட்டாசி என்பதால், இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்டவை செய்யப்படுவதை முன்னோர்கள் தவிர்த்து விட்டனர். முழுக்க முழுக்க இறைவழிபாட்டிலேயே இருந்துவிட்டனர்.
திருமணம் செய்ய சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்கள் மிகவும் உகந்தது என ஜோதிடம் கூறுகிறது. இந்த மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியும், புத்திர பாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அதேபோல், ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்யக்கூடாது. வைகாசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் எந்த சுபகாரியங்களையும் செய்யலாம். கர்ப்பிணிகளுக்கு இந்த மாதம் ஒற்றைப்படை மாதமாக அமையும் பட்சத்தில் வளைகாப்பு நடத்த எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
பொதுவாக நாம் நாட்காட்டியில் வாஸ்து நாள் என்று பார்த்திருப்போம். அதில் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய 4 தமிழ் மாதங்களில் மட்டும் வாஸ்து நாள் குறிப்பிடப்பட்டிருக்காது. அதனால் இந்த 4 மாதங்களில் பொதுவாக வீடு கிரகப்பிரவேசம், வாஸ்து பூஜை செய்யப்படுவதில்லை. வாடகை வீடாக இருந்தாலும், இம்மாதங்களில் குடியேறக் கூடாது. வீடு கட்ட தொடங்கி பணி நடந்து கொண்டிருந்தால், இந்த மாதத்தில் பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. மேலும், புரட்டாசி மாதம் இறைவழிபாட்டுக்கு மட்டுமின்றி, முன்னோர்கள் வழிபாடு செய்வதற்கும் மிகவும் உகந்தது.
தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை முன்னோர்களை வழிபட மிக முக்கியமான நாளாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளயபட்ச காலம் (15 நாட்கள்) விரதம், மகாளய அமாவாசை விரதம் மிகவும் விஷேசமானது. இந்த காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உரியது. புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சம் முன்னோர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. அதே போல பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம், நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடப்படும் மாதம் என்பதால், இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்தக் கூடாது. ஆனால், புரட்டாசியில் வளைகாப்பு நடத்திக் கொள்ளலாம்.
Read More : நாளை புரட்டாசி பௌர்ணமி..!! வீட்டில் வழிபடும் முறை..!! பெண்களே மறக்காம இதை பண்ணுங்க..!!