கோயிலுக்கு சென்று வந்தவுடன் இந்த தவறுகளை மட்டும் மறந்தும் கூட செய்யாதீங்க.!?
கோயில் என்பது கடவுள் இருக்கும் மிகவும் பரிசுத்தமான இடம். நமது பக்தியை செலுத்த கோயிலுக்கு அடிக்கடி சென்று வருகிறோம். இவ்வாறு கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
கோயிலுக்கு சென்றாலே நம் பாவங்கள் எல்லாம் தீர்ந்து சுத்தமான மனிதனாகி விடுவோம். அப்படிப்பட்ட இடத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது நம் கால்களை கழுவ கூடாது. அவ்வாறு செய்வது புண்ணியத்தை வாசலிலேயே கழுவி விட்டு வருவதற்கு சமம்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் நேரத்தில் பெண்களும், அந்த வீட்டு ஆண்களும் கோயிலுக்கு செல்ல கூடாது. கட்டாயமாக கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆண்கள் முழுவதுமாக தலைக்கு குளித்துவிட்டு செல்ல வேண்டும்.
மேலும் கோயிலில் இருந்து வீடு திரும்பும் போது எடுத்து வரும் பிரசாதங்களை மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தொடக்கூடாது. இவ்வாறு ஒரு சில பழக்க வழக்கங்களை தொடந்து பின்பற்றுவதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.