கோவிட் JN 1: புதிய வகை வைரஸின் அறிகுறிகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் அறிக்கை.!
2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா பெருந்துற்றால் கடும் பாதிப்பிற்குள்ளானது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவலின் காரணமாக உலகம் முழுவதுமே முடங்கியது. இந்த பெருந்தொட்டிற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கொரோனா வைரஸின் புதிய வகை மக்களிடையே பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடம் உலகெங்கிலும் கொரோனாவின் புதிய வகையான ஒமிக்ரான் ஜேஎன் 1 வகை வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு இந்தியாவிலும் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி கேரளாவில் இருக்கும் மூதாட்டி ஒருவர் இந்த வைரஸ் தொற்றிற்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக மகாராஷ்டிரா, கோவா பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மக்களாலாகி இருந்தனர். இந்நிலையில் புதிய வகையான ஜெ என் 1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கொரோனா வைரஸின் மற்ற வகைகளைப் போலவே இதற்கான அறிகுறிகளும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த புதிய ஜெஎன் 1 வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 10% பேருக்கு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கும் சளி வறட்டு இருமல் தலைவலி மயக்கம் உடல் வலி ஜலதோஷம் தொண்டை வறண்டு போவது தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஆகிய அறிகுறிகள் பொதுவாக காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த ஜெஎன்1 வைரஸ் பாதித்தவர்களில் 10% பேர் மட்டுமே தீவிர பாதிப்பிற்கு ஆளானதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் காய்ச்சல் மற்றும் உடல் வலியுடன் குணமாகுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அனேக பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.