அதிர்ச்சி!. தரையிறங்கும்போது திடீரென தீப்பிடித்த விமானம்!. 95 பயணிகளின் நிலை என்ன?
Plane fire: ரஷ்யாவில் இருந்து துருக்கி சென்ற சுகோய் ரக விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஷ்யாவின் சொச்சி நகரிலிருந்து துருக்கியேவின் அன்டால்யா நகருக்கு ரஷ்யாவின் Azimuth ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது துருக்கியின் அன்தால்யா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விமானத்தின் இடது பக்க இயந்திரம் தீப்பற்றியதாகவும் அது உடனே அணைக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரி கூறினார்.
இந்த விமானத்தில் இருந்து 89 பயணிகள் 6 ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 5 நிமிடங்களுக்கு முன்பு தீப்பிடித்திருந்தால் பேராபத்தில் முடிந்திருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலை மூன்று மணி வரை அன்டால்யா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ராணுவ விமான நிலையத்தைத் தற்காலிகமாகப் பயன்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: அடிக்கடி வாந்தி, குமட்டல் ஏற்படுகிறதா?. கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்!.