பண்டிகை காலங்களில் உண்ணும் உணவுகளால் ஏற்படும் மாரடைப்பு.. தடுக்கும் வழிமுறைகள்.?!
பொதுவாக நம் வீடுகளில் பண்டிகை காலங்களில் வகை வகையாக பலகாரங்கள் செய்வார்கள். அவற்றில் பல எண்ணெயில் பொரிக்கும் தின்பண்டங்களாகவே இருக்கும். அவற்றை உண்பதன் மூலம் நம் உடலில் கொழுப்பு படலம் அதிகரிக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு பலருக்கும் உருவாகிறது.
மேலும் குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதால் நம் உடல் சாதாரண நிலையிலும் சோர்வாகவே காணப்படும். இதில் எண்ணெய் நிறைந்த திண்பண்டங்களை தின்பதன் மூலம் உடலில் சுறுசுறுப்பு குறையும். மேலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்து வருகின்றது. இவற்றை தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்?
1. எண்ணெயில் பொறித்த தின்பண்டங்களை உண்ணாமல் தவிர்ப்பது.
2. குளிர்காலத்திலும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்வது.
3. மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற உடலுக்கு கெடுதல் தரும் பழக்க வழக்கங்களை தவிர்ப்பது.
4. மேலும் உடல் நலனில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காலதாமதத்தினாலும் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுகின்றது. இது போன்ற செயல் முறைகளின் மூலம் மாரடைப்பை தவிர்க்கலாம்.