For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உணவில் அதிகமாக தேங்காய் சேர்த்துக் கொள்வது உடலுக்கு தீமையா.? மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?

04:45 PM Feb 22, 2024 IST | 1newsnationuser5
உணவில் அதிகமாக தேங்காய் சேர்த்துக் கொள்வது உடலுக்கு தீமையா   மருத்துவர்களின் அறிவுரை என்ன
Advertisement

பொதுவாக பலரது வீடுகளிலும் சமையலில் தேங்காய் அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்கள். தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், தேங்காய் சட்னி, தேங்காய் சாதம், தேங்காய் லட்டு என பல வகைகளில் தேங்காய் வைத்து சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். அப்படியிருக்க தேங்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு தீமையை ஏற்படுத்துமா என்பது பலருக்கும் கேள்வியாகவே இருந்து வருகிறது. இதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்?

Advertisement

தேங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு சத்து என பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தேங்காயில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீர்படுத்தி மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்களுக்கு நல்ல பலனை தருகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

மேலும் தேங்காயில் உள்ள நல்ல கொழுப்பு உடலில் சேர்ந்து இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் தோல் நோய்களை குணப்படுத்தி சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க செய்கிறது. முடி உதிர்தல், தலையில் வறட்சி, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெயை உபயோகப்படுத்தலாம்.

இவ்வாறு அதிக நன்மையை தரும் தேங்காயை அதிகமாக பயன்படுத்தி வந்தால் உடல் எடை அதிகரிப்பதோடு, உடலில் கெட்ட கொழுப்பையும் அதிகரிக்க செய்கிறது. மேலும் அல்சர், நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்களுக்கு தேங்காய் சாப்பிடும் போது நோயின் பாதிப்பு அதிகமடையும். இதனால் தேங்காய் அதிகமாக உபயோகப்படுத்த கூடாது என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

English summary : the pros and cons of adding more coconut to your diet

Read more : Mud bath : ஆயுர்வேதத்தின் முதன்மை சிகிச்சையான மண் குளியல்.? என்னென்ன நன்மைகள் உள்ளன தெரியுமா.!

Advertisement