பற்கள் சொத்தையாக உள்ளதா, வாய் துர்நாற்றம் அடிக்கிறதா.? இந்த நோய் இருக்கலாம்.. உடனடியாக மருத்துவரை பாருங்க.!?
"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" என்று நம் முன்னோர்கள் பழமொழியாக கூறியுள்ளனர். உறுதியான பற்களுக்கு காலை மற்றும் இரவு என்று இரு வேளைகளும் பற்களை துலக்க வேண்டும். பற்களை தூய்மையாக வைத்துக் கொண்டால் வாய் துர்நாற்றம் இல்லாமல் மற்றவரிடம் பேசும் போது தன்னம்பிக்கையுடன் பேசலாம்.
பற்கள் தூய்மையாக இருப்பதற்கு நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் வைட்டமின்களும் முக்கியமான பங்கு வகிக்கிறது. பற்களை தூய்மையாக பராமரிக்காமல் சொத்தை ஏற்படுவதால் அவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வயிற்றில் புண்களையும் ஏற்படுத்தி நோய் பாதிப்புக்குள்ளாகிறது.
ஒரு சில நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் அவை பற்களையும் சேர்த்து பாதிக்கும். எனவே பற்கள் சொத்தை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
1. நீரிழிவு நோய்- இந்த நோய் இருப்பவர்கள் பற்களை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் பற்கள் சொத்தை ஏற்பட்டு தாடை எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தும்.
2. சிறுநீரகப் பிரச்சனை - சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் பற்களில் ஏற்படும் சொத்தைகள் அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை கொடுக்கும் என்பதால் பற்களை தொடர்ந்து பராமரித்து வரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
3. ஆரோக்கியமான பற்களை பெற வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.