ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள்..? எல்ஜிபி சிலிண்டர் முதல் கார் வரை..!! விலை உயரும் அபாயம்..?
2025ஆம் ஆண்டு பிறக்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. பொதுவாக புதிய மாதம் தொடங்கும் போது பல புதிய விதிகள் அமலுக்கு வருவது வழக்கம். அதேபோல், புதிய ஆண்டின் துவக்கம் இன்னும் விசேஷமானது. 2025 புத்தாண்டிலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. அந்த வகையில், என்னென்ன மாற்றங்கள் 2025இல் அமலுக்கு வருகின்றன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கார் விலை உயர்வு : 2025இல் புதிய கார் வாங்க நினைத்தால், அவர்கள் கூடுதல் பணம் செலவழிக்க நேரிடும். ஜனவரி 1 முதல், Maruti Suzuki, Hyundai, Mahindra, Honda, Mercedes-Benz, Audi மற்றும் BMW நிறுவனங்கள் வாகனங்களின் விலையை 3% வரை உயர்த்த உள்ளன. உற்பத்திச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எல்பிஜி சிலிண்டர் : ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் (14.2 கிலோ) விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் வர்த்தக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 73.58 டாலராக இருப்பதால், 2025 தொடக்கத்தில் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.
அமேசான் பிரைம் : அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கில் இருந்து இரண்டு டிவிகளில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். 3-வது டிவியில் பிரைம் வீடியோவைப் பார்க்க விரும்பினால், கூடுதல் சந்தா செலுத்த வேண்டும். இதற்கு முன், பிரைம் உறுப்பினர்கள் ஒரு கணக்கில் இருந்து 5 சாதனங்களில் வீடியோக்களை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO : ஜனவரி 1 முதல் ஓய்வூதியம் திரும்பப் பெறுவதற்கான விதிகளை EPFO எளிதாக்கியுள்ளது. இனி ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை நாட்டில் உள்ள எந்த வங்கியில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதி ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
பரிவர்த்தனைகள் : ஃபீச்சர் போன் பயனர்களுக்காக ஆர்பிஐ அறிமுகப்படுத்திய UPI 123Pay சேவையில் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சேவையின் கீழ் அதிகபட்சமாக ரூ.5,000 வரை பரிவர்த்தனை செய்ய முடியும். ஆனால், ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ.10,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெபாசிட் : NBFC -கள் மற்றும் HFC -களுக்கான நிலையான வைப்பு தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இந்த புதிய விதிகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த மாற்றங்களின் கீழ், டெபாசிட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சில விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை எடுத்துக்கொள்வது, லிக்விட் அசெட்டின் ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் வைப்புகளை காப்பீடு செய்வது போன்ற மாற்றங்கள் இதில் அடங்கும்.
வாட்ஸ் அப் : ஜனவரி 1ஆம் தேதி முதல், சில பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவு பழைய தொழில்நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு ஒரு பெரிய பாதிப்பாக அமையும்.
Read More :
இன்று மார்கழி அமாவாசை..!! வீட்டு வாசலில் யாரும் கோலம் போடாதீங்க..!! ஏன் தெரியுமா..?