மகாலட்சுமியின் அருள் கிடைக்க, வீட்டில் நிம்மதி, சந்தோஷம் அதிகரிக்க தினமும் விளக்கேற்றி வழிபடுங்கள்..!! அதுவும் இப்படி பண்ணி பாருங்க..!!
பொதுவாகவே வீட்டிலோ, கோயில்களிலோ விளக்கேற்றி வழிபடுவது இந்து மக்களின் பாரம்பரிய வழக்கம். அதிலும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது விஷேசம். தினந்தோறும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றினால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
* மகாலட்சுமியின் அருள் கிடைக்க தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பெண் குழந்தைகள் மகாலட்சுமியின் அம்சம். பெண் குழந்தைகளை தினமும் விளக்கேற்ற சொல்லுங்கள். அவர்களின் முகம் பொன்னாக ஜொலிப்பதை பார்க்கலாம்.
* சிலரது வீட்டில் மன நிம்மதியில்லாமல் இருக்கும். அந்த வீட்டில் வசிப்பவர்கள் தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், மன நிம்மதி அதிகரிக்கும்.
* சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும்.
* சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது அருணோதய காலத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டால் யோகங்கள் தேடி வரும்.
* மாலையில் சூரியன் மறைவதற்கு முன் பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பெருகும்.
* நாம் கோவில்களில் விளக்கினை ஏற்றினாலும், நம் வீட்டில் விளக்கினை ஏற்றினாலும், 2 கால்களையும் மடக்கி சம்மணம் இட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.
* இறந்தவர்களின் படத்திற்கு விளக்கு ஏற்றும் போது மட்டும் தான் வடக்கு திசையில் ஏற்ற வேண்டும். மற்றபடி, விளக்கின் திசையை மாற்றக் கூடாது.
* சில விசேஷ நாட்களில் நம் வீடுகளில் குத்து விளக்கு ஏற்றும்போது தரையில் அமர்ந்த நிலையில் தான் குத்து விளக்கின் 5 முகங்களையும் ஏற்ற வேண்டும்.
* பஞ்சக்கூட்டு எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் தெய்வத்தின் அருளையும், குலதெய்வத்துடைய அருளையும் பெற்று தரும்.