முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரவுடி சம்போ செந்திலுக்கும் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை? குற்றப்பத்திரிக்கையில் ஷாக்..

What a feud between rowdy Sambo Senthil and the slain Armstrong
08:16 AM Oct 05, 2024 IST | Mari Thangam
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் இருந்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சென்னையில் ஆட்கள் பலத்தோடு வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சியைத் தடுக்கவே இந்த கொலை செய்ததாக, கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய நான்கு முக்கியமான முன் விரோதங்களே காரணம் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதாவது, அஸ்வத்தாமன் நில விவகாரம் தொடர்பாகவும், சம்போ செந்தில் தலைமைச் செயலக காலணியில் வீடு விவகாரம் தொடர்பாக ரூ.30 லட்சம் மிரட்டி வாங்கியதும், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சி என இந்த நான்கு காரணங்களே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய முக்கிய காரணங்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கைதான ரவுடி கும்பல்களுக்கு ஒவ்வொரு விதமான முன் பகை இருந்தது. இதில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலுக்கும் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை என்பதனை போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்போ செந்தில் குடும்பத்தோடு ராயபுரத்தில் வசித்து வந்தார். சம்போ செந்திலின் தந்தை 2002இல் தலைமைச் செயலக காலனி குடியிருப்பு பகுதியில் ஒரு இடத்தை வாங்கினார். அந்த இடத்திற்கு அருகே உள்ள இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்ததாக கூறி ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. கட்டப் பஞ்சாயத்து செய்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த சம்போ செந்தில் தனது தந்தைக்காக பஞ்சாயத்து பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இடத்தை காலி செய்வோம் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மிரட்டியதாக கூறுகின்றனர். அதன் பிறகு பலகட்ட பேச்சுவார்த்தை பிறகு 12 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்று முதலே சம்போ செந்தில்- ஆம்ஸ்ட்ராங் இடையே பகை தொடங்கியது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதை மனதில் வைத்துக்கொண்டு ஆம்ஸ்டாராங் கொலைக்கு சம்போ செந்தில் தனது சொந்த பணமான 4 லட்சத்தை செலவிட்டதும், மற்றுவர்கள் மூலமாகவும் பணத்தை ஏற்பாடு செய்து கொலை திட்டத்திற்கான பணத்தை கொடுத்தது தொடர்பாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் 63 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்தும், வங்கிக் கணக்கிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணமும், ரொக்கமாக ரூ.80 லட்சமும் பறிமுதல் செய்து இருப்பதாகவும்" குற்றப்பத்திரிகையில் செம்பியம் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Read more ; தாமதமாக வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு!. புதிய விதிமுறைகள் வெளியீடு!

Tags :
ArmstrongCharge sheetPolicerowdy Sambo Senthil
Advertisement
Next Article