Western Toilet-ஆல் இத்தனை பாதிப்புகள் வருமா..? இந்தியன் டாய்லெட் சிறந்ததா..? எது பெஸ்ட்..?
மாடர்ன் உலகில் கழிவறையில் கூட நவீனத்தை புகுத்தி ஆரோக்கிய சீர் கேட்டை வான்டேடாக சென்று வாங்கிக் கொள்ளும் தலைமுறை இந்த தலைமுறை என்றால் அதற்கு மாற்று கருத்தே இல்லை. அந்த வகையில், இன்று பலர் இந்தியன் டாய்லெட்டுகளுக்கு பதிலாக வெஸ்டேர்ன் டாய்லெட்டுகளை தேர்வு செய்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் சில உண்மை தகவலை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொதுவாகவே மனிதர்களின் கழிவை வெளியேற்றும் இயற்கையான செயல்முறை என்பது கீழே முழங்கால்களை மடக்கி செரிமான பகுதியை அமர்த்தி உட்காருவதே ஆகும். அதற்கு ஏற்றார்போல்தான் இந்தியன் டாய்லெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை சுத்தம் செய்வதும் மிகவும் எளிமை தான். அதுமட்டுமின்றி, இந்த இந்தியன் டாய்லெட்டுகளில் நாம் அமரும்போது அதற்கும் நமது உடல் பாகத்திற்கும் இடைவெளி இருக்கும். இதனால் பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படாது.
அதே நேரம் வெஸ்டேர்ன் டாய்லெட் பயன்படுத்தும்போது, டிஷ்யு பேப்பர் கோண்டு டாய்லெட்டை துடைத்துவிட்டு அமர வேண்டும். துடைத்தால் மட்டும் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அகன்று விடுமா? என்பது மறுபக்கம். மேலும், அதில் இருக்கையில் அமருவதுபோல் அமர்ந்து நாம் கழிவுகளை கழிக்கும்போது டாய்லெட்டில் உள்ள கிருமிகள் நமது உறுப்புகளில் புகுந்து கொள்ளும். இதனால் இன்ஃபெக்ஷன் ஏற்படும். மேலும், திடக்கழிவை கழிக்கும்போது அதில் இருக்கும் தண்ணீர் உங்கள் உறுப்புகளில் சிதறலாம். இதனால் தொற்று ஏற்பட கூடும்.
பார்ப்பதற்கு மிகவும் லுக்காக இருக்கும் இந்த வெஸ்டேர்ன் டாய்லெட்டுகள் நம் வீடுகளில் இருக்கும் முதியவர்கள், முழங்கால்களை மடக்க முடியாத நோயாளிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தலாம். இந்நிலையில், வீடுகளில் இரண்டு டாய்லெட்டுகள் இருந்தால் அதில் ஒன்றை இந்தியன் டாய்லெட்டாகவும் மற்றொன்றை வெஸ்டேர்ன் டாய்லெட்டாகவும் கட்டமையுங்கள். அது சிறந்ததாக இருக்கும். எது எப்படி ஆனாலும் சரி இந்தியன் டாய்லெட்டுகள்தான் சுகாதாரத்தில் சிறந்தது என மருத்துவர்கள் மற்றும் டாய்லெட் கட்டமைப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Read More : குவைத் விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல் கொச்சி வந்தடைந்தது..!! தமிழர்களின் உடல்கள் எங்கே..?