For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கிணறு வெட்டும் பணி..!! 3 தொழிலாளர்கள் பரிதாப பலி..!! உறவினர்கள் சந்தேகம்..!!

3 laborers died on the spot when the rope fell while cutting the well.
10:17 AM Jul 30, 2024 IST | Chella
கிணறு வெட்டும் பணி     3 தொழிலாளர்கள் பரிதாப பலி     உறவினர்கள் சந்தேகம்
Advertisement

கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பெருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் (48), நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ( 40) ,உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) ஆகியோர் திங்கள்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணற்றை ஆழ்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த ரோப் அறுந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தணிகாசலம், ஹரிகிருஷ்ணன், முருகன் ஆகிய மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றுக்குள்ளேயே பலியாகினர். தகவலறிந்து வந்த போலீஸார், 3 பேர்களின் சடலங்களையும் கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிலத்தின் உரிமையாளர் கண்ணனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், கயிறு அறுந்து இவர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழக்கவில்லை என்றும் கிணற்றுக்குள் வெடிவைத்த போது தான் உயிரிழந்திருக்கக் கூடும் எனக் கூறி சடலத்தை எடுக்க விடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஒருமணி நேரம் பேச்சு வார்த்தைக்குப் பிறகு சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement