முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

களைகட்டும் சபரிமலை சீசன்!… மஹாராஷ்டிரா - கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள்!… முன்பதிவு தொடக்கம்!

09:30 AM Nov 27, 2023 IST | 1newsnationuser3
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த வாரம் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. நடை திறக்கப்பட்டது முதலே சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவசம்போர்டும் கேரள அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இருமுடி கட்டி தரிசனம் செய்ய வருவார்கள். இதனால் சபரிமலைக்கு தெற்கு ரயில்வே மற்றும் மத்திய தெற்கு ரயில்வே ஆகியவை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. மத்திய தெற்கு ரயில்வே மட்டும் சபரிமலைக்கு 22 ரயில்களை அறிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் தெற்கு ரெயில்வே சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்புக் கட்டண ரயில் சேவையை அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலம் பன்வெலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் சந்திப்பு - பன்வெல் (வண்டி எண்: 06075) சிறப்பு கட்டண ரயில் வரும் 28 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 28ஆம் தேதி, டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகள் மற்றும் ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் காலை 11.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு பன்வெல் ரயில் நிலையத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுமார்க்கத்தில், பன்வெல் - நாகர்கோவில் சந்திப்பு (வண்டி எண் 06076) சிறப்பு கட்டண ரயில் வரும் 29 ஆம் தேதி முதல் புதன் கிழமைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 29ஆம் தேதி, டிசம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகள், ஜனவரி 3, 10, 17 ஆகிய தேதிகளில் பன்வெல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags :
Booking Startsspecial trainsசபரிமலைசிறப்பு ரயில்கள்மஹாராஷ்டிரா - கன்னியாகுமரி
Advertisement
Next Article