ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆப்பு..!! உங்கள் பெயர் நீக்கப்படுகிறது..!! உஷாரா இருந்துக்கோங்க..!! அரசு அதிரடி அறிவிப்பு..!!
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே, ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்காகவே, இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் வாங்காத நுகர்வோரின் பெயர்களை, லிஸ்ட்டிலிருந்து நீக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படியொரு அதிரடி மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்கட்டமாக துவங்கியிருக்கிறது. நுகர்வோர் ரேஷன் பொருட்களை முறையாக பெற்றுக்கொள்ள வரவில்லையென்றால், பட்டியலில் இருந்தே அவரது பெயர் நீக்கப்பட்டு, அவர்களது பெயர்கள் இனிமேல் கடைக்கு வெளியே உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த அறிவிப்புக்கு பிறகும் நுகர்வோர் ரேஷன் கடைக்கு வரவில்லையானால், அல்லது இந்த நோட்டீஸ் போர்டினை பார்க்கும் பொதுமக்கள், சம்மந்தப்பட்டவர்களிடம் தகவல் தெரிவித்தும், ரேஷன் கடைக்கு வரவில்லையானால், அவர்களுக்கு ரேஷன் வாங்குவதில் விருப்பமில்லை என்றே கருதப்படும். பின்னர் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 6 மாதங்களாக யார் யாரெல்லாம் ரேஷன் பொருட்களை பெறவில்லையோ, அவர்களது பெயர்களை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம். கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பேருதவியாக திகழ்ந்து வரும் நிலையில், ரேஷன் அட்டைகளை வைத்திருந்தும்கூட, சிலர் அதை சரியாக பயன்படுத்தாமல் இருப்பது, புது தலைவலியை அரசுக்கு தந்துள்ளது.