For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ஆப்பு..!! வாடகை முதல் கல்வி கட்டணம் வரை..!! அதிரடி தடை..!!

05:15 AM Apr 21, 2024 IST | Chella
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ஆப்பு     வாடகை முதல் கல்வி கட்டணம் வரை     அதிரடி தடை
Advertisement

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர்களுக்கு தற்போது அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

நாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1.5 லட்சம் கோடி தொகையானது கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 26 சதவீதம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் கட்டணங்களில் சிலவற்றை தடை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, வாடகை செலுத்துவது, விற்பனையாளர் கட்டணம் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் கல்வி கட்டணம் செலுத்துவது போன்ற அம்சங்கள் இனி நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. முன்னதாகவே, சில வங்கிகள் தங்களின் வருடாந்திர கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்காக செலவு வரம்பில் இருந்து வாடகை அல்லது கல்வி கட்டணங்களை செலுத்தும் அம்சங்களை தவிர்த்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : ’மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வரும்’..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி..!!

Advertisement