For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'தர்மயுத்தம் 2.0' ; "எடப்பாடியை வீழ்த்தி 39 தொகுதிகளையும் வெல்வோம்" - சிவகங்கை கூட்டத்தில் ஓபிஎஸ் உறுதி.!

02:09 PM Feb 11, 2024 IST | 1newsnationuser7
 தர்மயுத்தம் 2 0     எடப்பாடியை வீழ்த்தி 39 தொகுதிகளையும் வெல்வோம்    சிவகங்கை கூட்டத்தில் ஓபிஎஸ் உறுதி
Advertisement

தமிழக அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக கட்சியின் நிர்வாகிகள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து விலக்கி தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் அதிமுக கட்சியின் கொடி சின்னம் மற்றும் லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

Advertisement

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார் ஓபிஎஸ். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை துரோகி என விமர்சித்த அவர் பாஜகவிற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு வர இருக்கின்ற தேர்தலில் தகுந்த படிப்பினையை கொடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வீழ்த்த தனது இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்குவதாக சிவகங்கையில் நடைபெற்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இது தொடர்பாக பேசிய அவர் புரட்சித்தலைவர் விதியை மீறி அதிமுக கட்சிக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் உண்மையான விசுவாசிகள் ஆகிய நாம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வீழ்த்துவோம். இந்தத் தேர்தலில் ஒன்றிணைந்து செயல்பட்டால் 39 தொகுதிகளிலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். ஓபிஎஸ் தொடங்கி இருக்கும் தர்மயுத்தம் 2.0 பற்றி பல்வேறு அரசியல் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Tags :
Advertisement