For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும்..!! தமிழகத்தில் வேகமாக பரவும் நோய் பாதிப்பு..!! மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

Do not eat food that has been contaminated by other people's saliva. People with flu-like symptoms should isolate themselves.
07:21 AM Jan 03, 2025 IST | Chella
மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும்     தமிழகத்தில் வேகமாக பரவும் நோய் பாதிப்பு     மருத்துவர்கள் எச்சரிக்கை…
Advertisement

தமிழ்நாட்டில் தற்போது 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரை 'வாக்கிங் நிமோனியா' எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

தற்போது குளிர்காலம் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதற்கிடையே, வாக்கிங் நிமோனியாவும் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக 5 வயது முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். வாக்கிங் நிமோனியா என்பது தீவிர தன்மை குறைந்த நிமோனியா ஆகும்.

இதன் அறிகுறிகளாக சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவை இருக்கும். பொதுவாக, வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்காது. ஆனால், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் அவசர பிரிவில் சேர்க்கும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிம்மோனியா, இருமும் போதும் வெளிப்படும் கிருமிகளால் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு கை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இந்த தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதேபோல, மற்றவர்களின் எச்சில் பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.

இது நுரையீரல் தொற்றை ஏற்படுத்தும் காய்ச்சல் என்பதால், அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். இந்த நோய் வயதில் மூத்தவர்களை பெரிதும் பாதிக்கும். அவ்வாறு தாக்கினால் தாங்க முடியாத பாதிப்பை கூட ஏற்படுத்தும். இளம் வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதோடு இணை நோய்கள் எதுவும் இருக்காது என்பதால், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட பலருக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் பெரிய அளவில் பலன் தருவதில்லை என்றும், இதனால் நோயின் தீவிரம் அதிகரித்து தீவிர சிகிச்சை பிரிவில் சூழல் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Read More : ஆரோக்கியமாக வாழ ஆசையா..? அப்படினா இந்த பழக்கங்களை கைவிடுங்கள்..!! இதையெல்லாம் கடைபிடியுங்கள்..!!

Tags :
Advertisement