தீவிரமாகும் HMPV வைரஸ்!. பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்!. தமிழக சுகாதார துறை அறிவுறுத்தல்!
Mask: தமிழகத்தில் 2 பேருக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணியவேண்டும் என்று சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் புதியதாக HMPV என்ற வைரஸ் பரவிவரும் நிலையில், மீண்டும் கொரோனா போன்ற கடும் பாதிப்பை அது ஏற்படுத்திவிடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றின் காரணமாக சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் அலைமோதுவதாக கடந்த சில தினங்களாகவே வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதும் அச்சத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. இருப்பினும் சீன தரப்பில் அதிகாரப்பூர்வமாக இப்படியொரு அச்சுறுத்தல் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் HMPV வைரஸ் தொற்றானது 8 மாத ஆண் குழந்தை மற்றும் 3 மாத பெண் குழந்தை என இரண்டு குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை 2 பேருக்கும், குஜராத்தில் ஒருவருக்கு என மொத்தம் இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவிதமான வெளிநாட்டு பயணமும் செய்யாத சூழ்நிலையிலும் 5 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இது பருவ காலங்களில் வரும் சாதாரண தொற்று போன்றதுதான் என்றும், கொரோனா போல அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் மற்றும் சீன மருத்துவ ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்: பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலையை கண்காணித்து வருவதாக அரசு தெரிவித்திருக்கும் நிலையில், பரவிவரும் HMPV வைரஸ் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் தமிழ்நாடு சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி பொதுமக்கள் மாஸ்க் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இருமல் அல்லது தும்மல் வரும்போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளுதல், கைகளை அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கழுவுதல், அறிகுறி இருந்தால் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்தல், டிஷ்யூ பேப்பர்கள் அல்லது கைக்குட்டைகளை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்த்தல், நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதை தவிர்த்தல், நெரிசலான பகுதிகளில் முகமூடிகளை அணிவதன் மூலம் பரவும் அபாயத்தைக் குறைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவசிய உதவி ஏற்படின் சுகாதாரத் துறை உதவியை நாடலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Readmore: இன்று காலை 10 மணிக்கு… ஆளுநர் RN.ரவியை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம்…!