"விஜயகாந்த் இதுல மட்டும் தான் நல்லவர் அண்ணன் சீமான் எல்லாத்தையும் வல்லவர்" - நாதக பொதுக்குழுவில் சாட்டை துரைமுருகன் பேச்சு.!
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் துரைமுருகன் கட்சியின் வளர்ச்சிக்காக நிர்வாகிகளே நிதி வழங்காமல் இருப்பது மிகுந்த மனவேதனையை தருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணன் சீமான் அறிவித்த விதி செருப்பு திட்டத்தில் இதுவரை 209 பேர் மட்டுமே இணைந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து விரிவாக பேசிய துரைமுருகன் " நாம் தமிழர் கட்சி கடந்த காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று இருக்கிறது. சிறுவர்கள் கூட அடுத்து நமது கட்சி தான் ஆட்சி என்று கூறும் அளவிற்கு நாம் தமிழர் கட்சி அசுர வளர்ச்சியை பெற்றிருக்கிறது. எனினும் ஒரு கட்சிக்கு பொருளாதாரம் என்பது அவசியமான ஒன்று. 2015 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நிதிக்காக 1,000 பேர் 1,000 ரூபாய் இன்று திட்டத்தை சீமான் கொண்டு வந்தார். ஆனால் இதுவரை 8 ஆண்டுகளில் 209 பேர் மட்டுமே அந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்" என வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் கட்சிக்காக மாதம் 10 லட்சம் ரூபாய் நிதி வந்தால் நமது கட்சி யாரிடமும் சென்று கையேந்து அவசியமில்லை எனவும் தெரிவித்தார். சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் பற்றி பேசிய துறைமுருகன் " கேப்டன் விஜயகாந்த் மறைந்ததற்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியை பதிவு செய்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஒரு நல்லவரை இழந்து விட்டோம் என பதிவு செய்திருந்தனர். கேப்டன் விஜயகாந்த் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் நல்லவர். ஆனால் நமது அண்ணன் சீமான் தனிப்பட்ட வாழ்வு மற்றும் அரசியல் என அனைத்திலுமே நல்லவர் . அவரையும் நாம் கைவிட்டு விடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
1,000 பேர் 1,000 ரூபாய் கட்சி நிதி திட்டத்தில் ஆயிரம் பேர் இணைவது தான் அதற்கான வெற்றி. கட்சிக்கு என நிதியின் மூலம் நமக்கு ஒரு வருமானம் இருந்தால் நாம் பிறரிடம் மிதிக்காத செல்ல வேண்டிய தேவை இருக்காது. நாம்தான் அடுத்த ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம். கோட்டையையும் கைப்பற்றுவோம். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் கட்சிக்கான நிதியை கொடுங்கள். 1,000 பேர் 1,000 ரூபாய் திட்டத்தில் இணையுங்கள். கட்சியை பலப்படுத்துங்கள்" என தொண்டர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்தார் சாட்டை துரைமுருகன்.