For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”ரூ.200 தருவதாக கூறியதால் தான் வந்தோம்”..!! அவர்களுக்கே தெரியாமல் தவெகவினரை பாஜகவில் இணைத்த நிர்வாகிகள்..?

On the stage of the ceremony, some executives who had left the Naam Tamilar Party joined the BJP in the presence of Sarathkumar.
10:56 AM Dec 17, 2024 IST | Chella
”ரூ 200 தருவதாக கூறியதால் தான் வந்தோம்”     அவர்களுக்கே தெரியாமல் தவெகவினரை பாஜகவில் இணைத்த நிர்வாகிகள்
Advertisement

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கைகளை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இதனால், அக்கட்சியின் கூடாரம் காலியாகி வருகிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சியில் இணைந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பாஜக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது, விழா மேடையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் சிலர் சரத்குமார் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், இதில் சிலர் தமிழக வெற்றி கழகம் கட்சியைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களை 200 ரூபாய் கொடுப்பதாக கூறி அழைத்து வந்ததாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தங்களுக்கு காசு கொடுக்கிறோம் என்று தான் அழைத்து வந்தார்கள். கட்சியில் இணைவது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறேன்” என இளைஞர் பேசிய ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Read More : பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள்..!! நைசாக பேசி காரில் அழைத்துச் சென்று பலாத்காரம்..? கல்லூரி உதவி பேராசிரியர் வெறிச்செயல்..!!

Tags :
Advertisement