For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாணவர்களே..!! அடுத்தாண்டு முதல் AI பாடத்திட்டம்..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதை கவனிச்சீங்களா..?

My wish is to somehow introduce an AI curriculum next year.
07:26 AM Dec 17, 2024 IST | Chella
மாணவர்களே     அடுத்தாண்டு முதல் ai  பாடத்திட்டம்     அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதை கவனிச்சீங்களா
Advertisement

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில், கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "ஏற்கனவே உள்ள ஆய்வுக் கூடங்களை, நவீன மயமாக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களாக மாற்ற நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுக் கூடங்களை அமைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சாதனை புரிவதற்கு காரணம் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதால் தான்.

மாணவர்கள் சரியாக படிக்கிறார்களா? என்று ஆய்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடத்துகிறது. அது பெரும்பாலும் தவறாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஒரே அரசு தமிழ்நாடு அரசு தான். அடுத்த ஆண்டில் எப்படியாவது ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அமெரிக்காவில் வரும் தொழில்நுட்பம் மறுநாளே தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்." என தெரிவித்தார்.

Read More : உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்..? இந்த உணவுகளை சாப்பிட மறந்துறாதீங்க..!!

Tags :
Advertisement